Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நயன்தாரா திருமணசர்ச்சை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா?

நயன்தாரா விக்னேஷ்சிவன் திருமணம் என்கிற செய்தி திரையுலகை வியப்படைய வைத்தது. உடனடியாக அந்தச் செய்தியை இருவரும் மறுத்துவிட்டார்கள். அதனால் வளரவேண்டிய சர்ச்சைகள் உடனடியாக ஒய்ந்துவிட்டன. இருந்தாலும் எப்படித் திடீரென இந்தச்செய்தி பெரிதானது? என்று பலரும் ஆராய்ச்சி செய்துகொண்டேயிருக்கிறார்கள்.

சிம்புவை வெறுப்பேற்ற நயன்தாராவே இப்படிச் சொல்ல வைத்துவிட்டார் என்றும் ராஜாராணி படம் தயாரான நேரத்தில் ஆர்யா நயன்தாரா திருமணம் என்றொரு செய்தி வந்தது, அது அந்தப்படத்துக்குப் பலமாக அமைந்தது அதுபோல இப்போது இந்தச் செய்தியால் இந்தப்படத்துக்குப் பலம் என்பதால் அவர்களே இப்படி வதந்தியை உருவக்கிவிட்டனர் என்றும் சொல்கிறார்கள்.

இன்னும் சிலரோ அவர்கள் இருவரும் காதலிப்பது உண்மைதான், அதை இப்போது வெளியில் சொல்லவேண்டாம் என்பதற்காக உடனடியாக மறுப்புத் தெரிவித்துவிட்டார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பலரும் பலவாறு பேசிக்கொண்டிருந்தாலும், வதந்தியில் சம்பந்தப்பட்ட விக்னேஷ்சிவன் உற்சாகமாக இருக்கிறாராம்.

அவர் இயக்கிய முதல்படம் போடாபோடி சரியாகப் போகவில்லை, இதனால் இயக்குநராக வெற்றி பெறமுடியவில்லையே என்கிற வருத்தத்தில் இருந்த அவருக்கு இப்போது ஏற்பட்ட சர்ச்சை வருத்தத்துக்குப் பதிலாகச் சந்தோசத்தையே கொடுத்திருக்கிறதாம். எப்படியோ என் படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்துவிட்டது இந்தப்படம் நிச்சயமாக வெற்றியடைந்துவிடும் என்று தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாராம் விக்னேஷ்சிவன்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close