Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் சேதுபதிக்கு ஜோடி அஞ்சலி

 'பீட்சா’ , ‘ஜிகர்தண்டா’ படங்களை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது இறைவி படத்தை இன்று துவங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு படத்தின் பூஜை போடப்பட்டு படம் ஆரம்பிக்கப்பட்டது. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, கருணாகரன், மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். 

முன்னதாக படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பூஜா குமாரிடம் பேச்சுவார்த்தை நடந்தது அவரிடமிருந்து பதில் வராத நிலையில் தற்போது அஞ்சலி நடிக்க இருக்கிறார். ‘அப்பா டக்கரு’, ‘மாப்பிள்ளை சிங்கம்’ படங்களின் மூலம் ரீஎன்ட்ரி ஆகியிருக்கும் அஞ்சலி ற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். 

மேலும் மற்ற நடிகர்களுக்கான ஜோடிகள் தேர்வு நடந்து வருகிறது. இசை சந்தோஷ் நாராயணன். படத்திற்கு ஒளிப்பதிவு சிவா. இவர் மாதவன் நடிக்கும் இறுதி சுற்று படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர். சென்னையில் இன்று படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close