Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிருத்திகாஉதயநிதி இயக்கும் சிம்பு படம் எப்போது?

சிம்பு நடித்த படங்கள் வெளியாகாமல் இருந்தாலும் புதியபடங்களில் அவரை ஒப்பந்தம் செய்யப் பலரும் ஆர்வம் காட்டிவருவது வியப்பான செய்திதான். அவர் இப்போது கௌதம்மேனனின் அச்சம்என்பதுமடமையடா, செல்வராகவனின் படம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தப்படங்களைத் தொடர்ந்து, உதயநிதியின் மனைவி கிருத்திகாஉதயநிதியின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. திரைக்கதை எழுதும் வேலைகளை முழுமையாக முடித்துவிட்டுப் படப்பிடிப்பைத் தொடங்கத் தயாராகிவிட்டாராம் இயக்குநர் கிருத்திகாஉதயநிதி. இந்நிலையில் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் சிக்கல் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் எப்போது படப்பிடிப்பு என்று திட்டமிடுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறதாம். இந்நிலையில் இந்தச்சிக்கலை அறிந்த உதயநிதி அதில் தலையிட்டுச் சிக்கலைத் தீர்த்துவைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கௌதம்மேனன் மற்றும் செல்வராகவனின் படப்பிடிப்புகள் முடிவடைகிற நேரத்தில் கிருத்திகா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று சொல்கிறார்கள்.

இந்த மூன்றுபடங்களையும் முடித்துவிட்டுத்தான் அடுத்த படங்களை ஒப்புக்கொள்வது என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறாராம் சிம்பு. அது மட்டுமின்றி முதலில் வாலு, அடுத்து இதுநம்மஆளு ஆகிய படங்களை வெளியிடுவதும் வேகமாக நடக்கவேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close