Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெருமையாக நிற்கிறோம் - சூர்யா , ஜோதிகா நெகிழ்ச்சி

 ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஜோதிகா , ரகுமான், டெல்லி கணேஷ், நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘36 வயதினிலே’. படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். இந்த படத்தின் மூலம் 8 வருடங்கள் கழித்து ஜோதிகா மீண்டும் சினிமாவில் காலடி பதித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் ரீமேக்காக வெளியான இப்படத்திற்கு குடும்பங்கள், மற்றும் பெண்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் குடும்பம், குழந்தைகள் என தனது சொந்த கனவுகளை தொலைத்துவிட்ட பெண்களுக்கு பாடமாக கருதப்படும் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் சூர்யா ஜோதிகா தம்பதி மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் சூர்யா, எனது ரசிகர்கள், சினிமா காதலர்கள் , மற்றும் மரியாதைக்குரிய மீடியாவிற்கு, இதயத்திலிருந்து சில வார்த்தைகள். 36 வயதினிலே படம் மூலம் என் மீது உள்ள அன்பையும், மரியாதையையும் காட்டி விட்டீர்கள். இது எங்களுக்கு மறக்க முடியாத வரவேற்பாக நீங்கள் அளித்துள்ளீர்கள். 

என் வீட்டுக் கதவை தட்டிய வாய்ப்பு, எனக்குள் இருக்கும் ஒரு நெருப்பு , இந்த படத்தை எடுப்பதற்கு நம்பிக்கை தரவே துவங்கினேன்.தினம் தினம் ஒவ்வொரு ரோல் என தங்களது கனவுகளை அடையும் பயணத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடும் நிலை பெண்களுக்கு உள்ளது.

வெறும் திருமணத்தில் மட்டும் இல்லை பெண்களின் சாதனை. ஒவ்வொரு பெண்ணும் இந்த ஆணாதிக்க உலகில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும், சுய மரியாதையை  விடாது இருப்பதில் தான் பெண்ணின் சாதனை இருக்கிறது .வீட்டையே சுமக்கும் பெண்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். என இந்த படம் மூலம் தெரிவித்ததில் பெருமை என ட்வீட் செய்துள்ளார் சூர்யா. 

மேலும் ஜோதிகாவின் வார்த்தைகள் என , மற்றுமொரு ட்வீட்டையும் பகிர்ந்துள்ளார்,  உங்கள் அனைவராலும் பெருமையாக நிற்கிறேன். ’36வயதினிலே’ படத்தை விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பெண்மையையும், அவளது சக்தியையும் கொண்டாடும் இந்த மாற்றத்திற்கு ஆதரவு தருகிறீர்கள் என என்னால் சொல்ல முடியும். 

பல வசந்திகள் தங்களது இலக்குகளை அடைவீர்கள் என நம்புகிறேன். அதீத அன்பு, மரியாதை, மற்றும் நன்றிகளுடன் ஜோதிகா என ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார்கள் சூர்யா - ஜோ. 

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close