Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹாலிவுட் படத்தில் தனுஷ்?

 ’ஆடுகளம்’ படம் மூலம் தேசிய விருது, அதைத் தொடர்ந்து பிலிம் ஃபேர் விருது, கொலவெறி பாடல் மூலம் இந்தியா அளவில் பிரபலம் என தனுஷ் ரேஞ்சே இப்போது வேறு. இது மட்டுமின்றி ‘ராஞ்சனா’ வெற்றி அதைத் தொடர்ந்து ‘ஷமிதாப்’ படத்தில் கிடைத்த வரவேற்பு என இப்போது மேலும் அடுத்த கட்டத்திற்கு செல்லவிருக்கிறார். 

பெர்சியன் நாட்டு இயக்குநர் மார்ஜென் சத்ரபி ,விரைவில் ’ரூமெயின் பியூர்டோலஸ் எழுதிய 'தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் த ஃபாகிர்’ என்ற புகழ் பெற்ற நாவலை தழுவி ஒரு படத்தை இயக்க இருக்கிறார். டெல்லியிலிருந்து பிரான்சு நாட்டுக்கு செல்லும் ஒருவன் , வழியில் ஒரு பெண்ணை காதலிக்க பிறகு நடந்தது என்ன என்பதே படத்தின் மீதி கதை. 

காதல், ரொமான்ஸ், அதைச் சுற்றிய உணர்வுகள் என அதிகம் விற்பனையான இந்த நாவலைத் தழுவிய கதையில் ஹீரோவாக நடிக்க தனுஷிடம் கேட்கப்பட்டுள்ளதாம். மேலும் ஆங்கிலம் பேசும் மூன்று இந்திய நடிகர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது எனவும் கேன்ஸ் விழாவில் மார்ஜேன் தெரிவித்துள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close