Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜூராசிக்வேர்ல்டு படத்தை வாங்கப் போட்டி!

தமிழ்நாட்டில் தமிழ்ப்படங்களைக் காட்டிலும் ஆங்கிலப்படங்களின் வியாபாரம் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறது. அண்மையில் வெளியான பாஸ்ட்அண்ட்ப்யூரியஸ் மற்றும் அவெஞ்சர்ஸ் ஆகிய இரண்டுபடங்களின் வசூலும் எல்லோரையும் ஆங்கிலப்படத்தின் பக்கம் பார்க்கவைத்திருக்கிறதாம்.

இதனால் ஜூன்12 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிற ஜூராசிக்வேர்ல்டு என்கிற படத்தின் தமிழகஉரிமையை வாங்க தமிழ்த்திரையுலகின் பெரிய திரைப்படநிறுவனங்களெல்லாம் போட்டி போட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுபோன்ற படங்களின் தமிழ்நாடு திரையரங்கவெளியீட்டு உரிமை லட்சங்களில்தாம் இருந்ததாம். இப்போது அதுவும் கோடிகளாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

இப்போது ஜூராசிக்வேர்ல்டு படத்தின் தமிழகஉரிமைக்காக போட்டியிடும் நிறுவனங்கள் இரண்டரைகோடி வரை அதற்கு ஒதுக்கத் தயாராக இருக்கின்றனவாம். ஆங்கிலப்படத்துக்கு இவ்வளவு விலையா என்றால், நிச்சயமாக நட்டம் ஏற்படாது என்றும் படம் நன்றாக இருக்கிறது என்றாகிவிட்டால் ஒன்றிலிருந்து ஒன்றரைகோடி லாபம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

தமிழ்ப்படங்களைப் போல விளம்பரங்களுக்குச் செலவு செய்யவேண்டியதில்லை. இதற்கான பார்வையாளர்கள் தனியாக இருப்பதால் தமிழ்ப்படங்களோடு போட்டியும் ஏற்படாது ஆகிய காரணங்களால் இதுபோன்ற ஆங்கிலப்படங்களை வாங்கப் போட்டிபோடுகிறார்களாம்.  இந்தப்படம் யார் கைக்குக் கிடைக்கும் என்று தெரியவில்லை என்று சொல்கிறார்கள். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close