Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ஹைக்கூ படப்பிடிப்பு முடிந்தது. இது நம்ம ஆளு சீக்கிரமே முடிஞ்சிடும்” பாண்டிராஜ்

சிறுவர்களுக்கான கதையாக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ஹைக்கூ. படத்தில் சூர்யா, அமலாபால் இருவருக்குமான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன என்பதை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் சூர்யா சமுக ஆர்வலராகவும், அமலாபால் ஆசிரியராகவும் நடித்துள்ளனர். அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதாம். இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே எடுக்கவேண்டுமாம்.

இதுகுறித்து ட்விட்டரில் பாண்டிராஜ், “ ஹைக்கூ படத்திற்கான சூர்யா மற்றும் அமலாபால் காட்சிகள் படமாக்கிவிட்டோம். எப்போதும் அமைதியாகவும் மகிழ்சியாகவும் இருந்த உங்களுடன் வேலை செய்ததற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

ஹைக்கூ படம் தொடங்குவதற்கு முன்னரே தொடங்கி இன்னும் முடியாமல் இழுப்பறியில் இருக்கும் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் இதுநம்ம ஆளு. தயாரிப்பாளரால் பிரச்னையில் நிற்கும் இப்படத்தினை பற்றியும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் பாண்டிராஜ்.

 “ இது நம்ம ஆளு என்னுடைய சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம். அதனால் இதையும் விரைவில் முடித்து வெளிவிட முயற்சி செய்கிறேன். சிம்புவை புது ஆளாக வித்தியாசமான தோற்றத்தில் விரைவில் நீங்கள் பார்ப்பீர்கள்” என்றும் ட்விட் செய்துள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close