Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புலி ஒளிப்பதிவாளரின் அடுத்த அவதாரம்.

நாளை, சக்கரவியூகம், மிளகா, முத்துக்குமுத்தாக என்று பல படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் சதுரங்கவேட்டை படம் ஒளிப்பதிவாளர் நட்டிக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது.

நட்டி அடுத்து கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. ஈராஸ்நிறுவனம் அந்தப்படத்தைத் தயாரிக்கிறதாம். இயக்குநர் பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த ராமு என்பவர் எழுதி இயக்கும் அந்தப்படத்தின் பெயர் எங்கிட்டமோதாதே.

விஜய்காந்த் நடிப்பில் 1990 இல் வந்த படத்தின் பெயரையே நட்டி படத்துக்கு வைத்திருக்கிறார்கள். விஜய்காந்த் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனிடம் ஒப்புதல் வாங்கி இந்தப்படத்துக்கு அந்தப்பெயரை வைத்திருக்கிறார்கள்.

புலி படத்தின் மொத்த வேலைகளும் முடிவடைந்துவிட்டதாகவும் அதன்பின்னரே இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு நட்டி போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. புலி ஆகஸ்டில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படப்பிடிப்புக்கு நடுவே புலி படத்தின் வேலைகளிலும் ஈடுபடுவாராம் நட்டி.

சதுரங்கவேட்டை படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்தப்படத்தின் மூலம் அதைத்தக்கவைத்துக்கொள்வேன் என்கிற நம்பிக்கையில் இந்தப்படத்தில் மிகஆர்வமாக ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close