Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, அமலாபால்

விக்ரம் பிரபு , கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விஜய் இயக்கும் ’இது என்ன மாயம்’ படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் அடுத்த படத்தை இயக்க உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா நேரடியாக தமிழில் மற்றொரு இயக்குநர் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தங்கர் பச்சான் இயக்கத்தில் இவர் நடித்த களவாடிய பொழுதுகள் படம் 2010ம் ஆண்டே முடிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. மீண்டும் பிரபுதேவாவை தமிழ் சினிமாவில் பார்க்க நினைப்பவர்களுக்கு இந்த படம் சரியான வரவு என்றே சொல்லலாம்.

மேலும் இந்த படத்தில் அமலா பால் ஒரு கேரக்டர் நடித்தால் நன்றாக இருக்கும் என பிரபு தேவாவே கேட்டுக்கொண்டதால் தற்போது கணவர் இயக்கத்தில் ’தெய்வத்திருமகள்’, ‘தலைவா’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அமலா பால் நடிக்க இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் மிகச்சில நாயகிகளில் அமலா பாலும் ஒருவர். சமீபத்தில் நடந்த விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close