Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெங்களூர்டேஸ் படத்துக்குத் தமிழில் என்ன பெயர்?

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பெங்களூர்டேஸ் படத்தைத் தமிழில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபிசிம்ஹா, பார்வதி, ராணாடகுபதி உட்பட பலர் நடிக்கும் அந்தப்படத்தை பொம்மரிலுபாஸ்கர் இயக்கிக்கொண்டிருக்கிறார்.

தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டுமொழிகளிலும் இவரே இயக்குவார் என்று சொல்லப்பட்டது. இப்போது தமிழில் மட்டும்தான் அவர் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள். படப்பிடிப்பு தொடங்கி நடந்துகொண்டிருக்கிறதாம். ஆனாலும் படத்துக்கு தமிழில் என்ன பெயர் என்பதை அவர்கள் இன்னும் சொல்லவில்லை. சிங்கப்பூர்டேஸ் என்று பெயர் வைக்கலாம் என்று யோசித்தார்களாம்.

தமிழில் படமெடுக்கும்போது தமிழில் பெயர் வைப்பது கட்டாயம் என்பதால் சிங்கப்பூர்டேஸ் என்கிற பெயர் வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டார்களாம். இப்போது அவர்கள் வைக்க நினைத்திருக்கும் பெயர் இதுவும்கடந்துபோகும். பல பெயர்களைப் பரிசீலித்துவிட்டு கடைசியாக இந்தப்பெயரை வைக்கலாம் என்று படக்குழு முடிவுசெய்திருக்கிறதாம். இந்தப்பெயர்தான் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நம்புவதாகச் சொல்லப்படுகிறது.

அதேசமயம், மிகவும் ஜாலியான படம் என்று சொல்லப்படுகிற அந்தப்படத்துக்கு இவ்வளவு அழுத்தமான பெயர் வைக்கலாமா என்கிற யோசனையும் இருக்கிறதாம். அதனால் இந்தப்பெயரை வெளியில் சொல்லாமல் இருக்கிறார்களாம்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close