Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிமுருகன் அடுத்த ‘எம்ஜிஆர்’ ஆகுமா?

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடிப்பில் ஜூலை 17ம் தேதி வெளியாக உள்ள படம் ‘ரஜினிமுருகன்’. படத்திற்கு இசை டி.இமான். 

இந்நிலையில் ஏற்கனவே திருப்பதி பிரதர்ஸ் கொடுக்க வேண்டிய கடனுக்காக ‘உத்தம வில்லன்’ படம் வெளியாகும் நேரத்தில் வருண்மணியனாலும் சிக்கல் ஏற்பட்டது என்று சொன்னார்கள். பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஒரு நாள் தாமதமாக வெளியானது.  அந்த படத்திற்கு வரவேற்புகள் குறைந்ததற்கான காரணம் கூட இந்த தயாரிப்புத் தரப்பு பிரச்னைதான்.

தற்போது வருண்மணியனுக்கு இன்னும் 5 கோடி திருப்பதி பிரதர்ஸ் தரவேண்டும் எனவும் அதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘உத்தம வில்லன்’ மற்றும் ‘ரஜினிமுருகன்’ படங்களை வெளியிட தடை கோரி ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ’உத்தம வில்லன்’ வெளியாகிவிட்ட நிலையில் தற்போது ரிலீசுக்காக காத்திருக்கும் ’ரஜினிமுருகன்’ படமும் இந்த தடை கோரிய லிஸ்டில் உள்ளது.

இது தவிர்த்து வருண்மணியன் ட்விட்டரில், ரஜினிமுருகன் அடுத்த ’எம்ஜிஆர்’ படமாகுமா? என ட்வீட் செய்துள்ளார். ‘எம்ஜிஆர்’ என்பது விஷாலின் வெளியாகாமல் இருக்கும் ‘மதகஜராஜா’ படமென்பது யாவரும் அறிந்த ஒன்று. இதைத்தான் தற்போது வருண்மணியன் ’ரஜினிமுருகன்’ படத்துடன் ஒப்பிட்டுள்ளார். இதுகுறித்து படத்திற்கு சம்மந்தப்பட்ட திருப்பதி பிரதர்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான போஸிடம் பேசியபோது , எந்த பிரச்னையும் இல்லை திட்டமிட்டபடி படத்தின் இசை வெளியீடு ஜூன் மாதமும், படம் ஜூலை 17ம் தேதியும் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close