Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள்!

சென்னை: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்று கொண்ட விழாவில் அவரது தோழி சசிகலா, நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார், பி.சி.சி.ஐ. சீனிவாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தின் புதிய முதல்வராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று பதவி ஏற்று கொண்டார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக கடற்கரை சாலை முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் பெரும் திரளாக திரண்டு ஜெயலலிதாவை உற்சாகமாக வரவேற்றனர். காலை 9 மணிக்கு முன்னதாகவே அமைச்சராக பொறுப்பேற்க உள்ள 28 பேரும் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வந்தனர்.

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் விழாவை நேரில் காண நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு, தியாகு, மதுரை ஆதீனம், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா, இசையமைப்பாளர் இளையராஜா, செய்தி வாசிப்பாளர்கள் பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, குயிலி ஆகியோரும் வந்திருந்தனர். மேலும், பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் இந்த விழாவை காண வந்திருந்தனர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close