Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உதயநிதி ஸ்டாலின் , எமி ஜாக்சன் நடிக்கும் ’கெத்து’ படத்தின் கதை!

ஜெகதீஸ் இயக்கத்தில் உதயநிதி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ’நண்பேன்டா’ எப்போதும் சிரித்த முகமாக நடித்த உதயநிதி இதில் ரொம்ப சீரியஸாக ஆக்‌ஷன் கதையம்சத்தில் நடிக்கிறாராம். இந்தப் படத்தையும் அவரது ரெட்ஜெயன்ட் மூவீஸ்தான் தயாரிக்கிறது. படத்தை இயக்குகிறார் திருக்குமரன் .

இவர், ’மான் கராத்தே’ படத்தை இயக்கியவர். ’கெத்து’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். படத்தில் உதயநிதியுடன் முதல் முறையாக காமெடி கூட்டணியில் நடிக்கிறார் கருணாகரன். வழக்கம்போல் இசை ஹாரிஸ் ஜெயராஜ்தான். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் முதல்முறையாக உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் எமி ஜாக்சன் பிராமணப் பெண்ணாக நடித்துள்ளாராம். ஆக்‌ஷன் கதை என்றாலே காலம் காலமாக ஹீரோயின் மாமியாக நடிப்பது நாம் அறிந்ததே. இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல.எனினும் இதில் என்ன தனித்தன்மை உள்ளது என்பது படம் வெளியானால் தான் தெரியும். 

 ''எந்த வம்புக்கும் போகாமல், எப்பவுமே யோகா, தியானம் என அமைதியாக இருக்கும் பையனாக உதயநிதி ஸ்டாலின். அசைவம்கூட சாப்பிட மாட்டார். ஆனால் அவரது அப்பா சத்யராஜ் அவருக்கு நேரெதிர். சின்ன தப்பைக்கூட ரஃப் அண்ட் டஃப்பாக  தட்டிக் கேட்கும் சுபாவி. அப்பாவின் கோபத்தால் மகனுக்கு ஒரு பிரச்னை. அதை அவர் எப்படித் தீர்க்கிறார் என்பது தான் மீதிக் கதை என படத்தின் கதையாக சொல்லப்படுகிறது.

செய்தியை ஆடியோ வடிவில் கேட்க:

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close