Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சந்தானத்தின் அடுத்த படம்?

விண்ணைத்தாண்டிவருவாயா படத்தில் நடித்ததால் விடிவி.கணேஷ் என்று சொல்லப்படுகிற கணேஷ், சில ஆண்டுகளுக்கு முன், தன் நண்பருடன் சேர்ந்து சிம்பு நடித்த வானம் படத்தைத் தயாரித்தார்.

விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் வியாபாரரீதியாக அந்தப்படம் சரியாகப் போகவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் அடுத்தடுத்துப் படங்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்தாமல் நடிப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார். இப்போது மீண்டும் அவர் படம் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அடுத்து அவர் தயாரிக்கவிருக்கும் படத்தில் நடிக்க சந்தானம் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

அவர் நாயகனாக நடிப்பதற்கேற்ப சில கதைகளைக் கேட்டு வைத்திருக்கிறார்களாம். அவற்றில் சந்தானத்துக்குப் பிடித்தமான கதை படமாக்கப்படும் என்று சொல்கிறார்கள். சந்தானம் படங்களுக்கு இப்போது இருக்கும் வியாபாரம் பாதுகாப்பானதாக இருக்குமென்றும் அதனாலேயே சந்தானத்தை வைத்துப் படம் தயாரிக்க கணேஷ் முன்வந்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

சந்தானம் நடிப்பில் ஜூன் 12 அன்று இனிமேஇப்படித்தான் படம் வெளியாகவிருக்கிறது. அந்தப்படம் வெளியான பின்பு கணேஷ் தயாரிப்பில் அவர் நடிக்கவிருக்கும் புதியபடம் பற்றி அறிவிப்பு வருமென்று சொல்லப்படுகிறது.
 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close