Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிங்கப்பூரில் சிங்கிளாக வரும் ரஜினிமுருகன்!

காக்கிச்சட்டை படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ரஜினிமுருகன். இமான் இசையமைக்கும் இப்படத்திற்கான சிங்கிள் டிராக் மே 29ல் சிங்கப்பூரில் வெளியாகவிருக்கிறது.

என்னமா இப்படி பண்றீங்களேமா என்ற இந்த  பாடலை முதலில் மதுரையில் வெளியிடுவதாக திட்டமிட்டார்களாம். தற்பொழுது சிங்கப்பூர் சன் டெக் சிட்டியில் நடைபெறவிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்சியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

நிகழ்வில் சிவகார்த்திகேயனும், டி. இமானும் இணைந்து இப்பாடலை பாடவிருக்கிறார்களாம். மேலும் நிகழ்ச்சியில் கீர்த்திசுரேஷ், பொன்ராம், லிங்குசாமி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பங்கேற்கவிருக்கின்றனர். டி.இமான் ட்விட்டர் பக்கத்தில் சிங்கபூர்ல சிங்கிள் என்று ட்விட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ், சூரி, சமுத்திரகனி, ராஜ்கிரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ரஜினி முருகன். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close