Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி கொடுத்த பணத்தைத் தராமல் ஏமாற்றினார்களா?

கடந்தஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி வெளியான ரஜினி நடித்த லிங்கா படத்தின் சிக்கல்கள் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்தப்படத்தை வெளியிட்டதில் பெரியநட்டம் என்று விநியோகஸ்தர்களும் திரையரங்குஉரிமையாளர்களும் கூறினார்கள். அதோடு எங்களுக்கு ஏற்பட்ட நட்டத்தைத் திருப்பித்தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

உண்ணாவிரதம், பிச்சைஎடுக்கும்போராட்ட அறிவிப்பு என்று தொடர்ந்து போராடினர். பல கட்டப் பேச்சுவார்த்தைகளின் பின்னால் லிங்கா படக்குழுவின் தரப்பிலிருந்து பனிரெண்டரைகோடி பணத்தைத் திருப்பித் தருவதாகச் சொல்லப்பட்டது.  எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டதால் அதோடு சிக்கல் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே கொடுத்த பணத்தைப் பிரித்துக்கொள்வதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையே சிக்கல் என்றும் சொல்லப்பட்டது. அது தொடர்பாக மறுபடி எதுவும் செய்திகள் வரவில்லை.

இப்போது திடீரென, ரஜினி கொடுத்த பணத்தை தயாரிப்பாளர்சங்கத்தலைவர் தாணு மற்றும் திருப்பூர்சுப்பிரமணி ஆகியோர் முழுமையாகப் பிரித்துக்கொடுக்கவில்லை என்றும் பனிரெண்டரைக் கோடியில் சுமார் ஆறுகோடி மட்டும்தான் பிரித்துக்கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் மீதிப்பணத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டார்கள் என்றும் விநியோகதஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக விளக்கங்களைத் தர பத்திரிகையாளர் சந்திப்பொன்றையும் இன்றுமாலை (மே 26) நடத்தவிருக்கிறார்கள்.

இது தொடர்பாக கலைப்புலிதாணுவிடம் கேட்டபோது, எல்லாப்பணத்தையும் சரியாகப் பிரித்துக்கொடுத்துவிட்டோம் அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன அவர்கள் எதற்காக இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை, என்னிடம் இருக்கும் ஆதாரங்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று சொல்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close