Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யூ சான்றிதழ் பெற்றது எலி! எப்போ ரிலீஸ்?

வடிவேலு நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “எலி”. சென்சார் பார்வைக்குச் சென்ற இப்படம் யூ சான்றிதழ் பெற்றுள்ளது. 60களில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைத்தளமே எலி.

வடிவேலுவின் முந்தைய படமான தெனாலிராமன் இயக்கிய யுவராஜ் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். சதா நாயகியாக நடித்திருக்கிறார். இசை வித்யாசாகர்.

ஜூன் 12ம் தேதி படம் வெளியாகும் என்று பல பரவிவருகின்றன.  இதைப் பற்றி எலி படக்குழுவிடம் கேட்ட போது, தற்பொழுது தான் யு சான்றிதழ் பெற்றிருக்கிறோம். அடுத்து வரிவிலக்குக்கு விண்ணப்பிக்க வேண்டும். வரிவிலக்கு பெற்ற பின்னரே படத்தின் தேதி திட்டவட்டமாக முடிவாகும் என்று கூறுகின்றனர்.

வடிவேலு இப்படத்தில் ரகசிய போலீஸாக நடிக்கிறார், ஸ்மக்லிங் கும்பலில் நுழைந்து குற்றவாளிகளை  இந்த எலி (வடிவேலு) பிடிப்பதை காமெடி சரவெடியுடன் உருவாகியிருக்கும் படமே எலி.  60களில் நடக்கும் கதை என்பதால் முழுக்க முழுக்க தோட்டா தரணியின் கலையில் உருவாகியிருக்கிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்