Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாப்ளசிங்கம் பாடல்கள் வெளியானது எப்படி? ஆச்சரியமூட்டும் நிகழ்வு !

விமல் அஞ்சலி நடித்திருக்கும் மாப்ளசிங்கம் படத்தின் பாடல்கள் மே 25 அன்று இணையத்தில் வெளியாகிவிட்டது. ஒருபடத்தின் பாடல்கள் வெளியீடு என்பது அந்தப்படத்தின் விளம்பரத்திற்குப் பெரிதும் உதவக்கூடியது. எவ்வித விளம்பரமும் இன்றி இந்தப்படத்தின் பாடல்கள் வெளியானது எப்படி?

இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் எஸ்கேப்ஆர்டிஸ்ட் நிறுவனம், தாம் தயாரித்த முந்தைய படங்களின் பாடல்கள் வெளியீட்டுவிழாவை சிறப்பாக நடத்திய நிறுவனம். அவர்கள் ஏன் ஒரு சின்னஅறிவிப்புகூட இல்லாமல் பாடல்களை வெளியிட்டுவிட்டார்கள் என்று விசாரித்தால், படக்குழுவினருக்கே தெரியாமல் பாடல் வெளியாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

அது எப்படி அவர்களுக்குத் தெரியாமல் வெளியாகும்? பாடல் உரிமையை வாங்கியிருக்கும் நிறுவனத்திடம் மே25 இல் பாடல்வெளியீடு இருக்கும் என்று தயாரிப்புநிறுவனத்திலிருந்து சொல்லியிருந்தார்களாம். சில காரணங்களால் பாடல்வெளியீட்டு நிகழ்ச்சியை தயாரிப்புநிறுவனம் தள்ளிவைத்திருக்கிறது. அந்தத்தகவல் தெரியாமல் தயாரிப்புநிறுவனத்திடமும் கேட்காமல் அவர்களாகவே மே 24 நள்ளிரவில் பாடலை வெளியிட்டுவிட்டார்களாம். விடிந்தபின்புதான் தயாரிப்புநிறுவனத்துக்கே தெரிந்திருக்கிறது.

உங்கள் படத்தின் பாடல்களைக் கேட்டோம் நன்றாக இருக்கிறது என்று பலர் பேசியிருக்கிறார்கள். அதன்பின்தான் தயாரிப்புநிறுவனத்துக்குத் தெரிந்திருக்கிறது, அதிர்ச்சியடைந்த நிறுவனம் அவர்களைத் தொடர்பு கொண்டு பாடல்களை எடுத்துவிடுங்கள், சில நாட்களில் பெரியஅளவில் வெளியீட்டுவிழா நடத்துகிறோம் என்று சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close