Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாங்க எங்கேயும் போகல , சென்னையே போதும் - VSOP டீம் அடுத்த ப்ளான்!

 ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் நடித்துவரும் படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. படத்திற்கு  இசை டி.இமான். படத்தை ஆர்யாவின் தி ஷோ பிபிள் நிறுவனமே தயாரித்து வருகிறது. 

படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் , மற்றும் எடிட்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் எடுக்க வேண்டுயுள்ள நிலையில் படக்குழு எந்த வெளிநாட்டிற்கும் செல்லவில்லையாம். முழு படத்தையும் சென்னை, சென்னையை சுற்றிய பகுதிகள் என படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். 

அதே பாணியில் இந்த பாடல்களையும் ஒரு பாடலை சென்னை அவுட்டோர் மற்றும் மற்றொன்றை செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தவும் முடிவு எடுத்துள்ளனராம். ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் அடுத்த பார்ட் போன்று இதுவும் பக்கா காமெடியில் உருவாகி வருகிறதாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close