Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருட்டுரயில் படவிழாவுக்கு உதயநிதி ஏன் வரவில்லை?

உதயநிதிஸ்டாலினின் மாமாமகன் அதாவது உதயநிதியின் தாயார் திருமதி துர்காவதிஸ்டாலினின் அண்ணன் மகன் ரக்ஷன் கதாநாயகனாக நடிக்கும் படம் திருட்டுரயில்.

திருப்பதி என்பவர் எழுதி இயக்கியிருக்கும் அந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று சென்னையில் நடந்தது. அந்த விழாவில் திருமதி துர்காவதிஸ்டாலின் கலந்துகொண்டு பாடல்களை வெளியிடுவார் என்றும், உதயநிதிஸ்டாலின் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொள்வார் என்றும் அழைப்பிதழில் இருந்தது.

ஆனால் பாடல்வெளியீட்டுவிழா நிகழ்ச்சியில் உதயநிதிஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. நிகழ்ச்சிக்கு வந்திருந்த துர்காவதிஸ்டாலினும் பாடல் வெளியிடுகிற நேரத்தில் மட்டும் மேடைக்கு வந்தார். நெருங்கிய உறவுப்பையன் நடித்த படவிழாவுக்கு உதயநிதிஸ்டாலின் வரவில்லையே ஏன் என்று கேட்டால், அவர் வந்தால் முழுக்க அரசியல் மாதிரி தெரியும் என்பதால் வரவில்லை என்று சொல்கிறார்கள்.

விழாவுக்கு துர்காவதிஸ்டாலின் மற்றும் உதயநிதிஸ்டாலின் ஆகியோர் வருகிறார்கள் என்று அழைப்பிதழில் இருந்ததால், அழைப்பிதழில் பெயர் போடப்பட்டிருந்தும் தயாரிப்பாளர்சங்கத்தலைவர் தாணு உட்பட தயாரிப்பாளர்சங்க நிர்வாகிகள் யாரும் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close