Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னய்யா விளம்பரம் - மீண்டும் நிரூபித்த கவுண்டமணி

காமெடி கிங் கவுண்டமணிக்கு நேற்று முன் தினம் பிறந்தநாள். பிறந்தநாளை தான் நடித்து வரும் ‘எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது’ படப்பிடிப்பு தளத்திலேயே கொண்டாடினார். படக்குழுவினர்  அவரது பிறந்தநாளை கேக் வெட்டி சற்று பெரிய அளவில் கொண்டாட விரும்பி அவரிடம் கேட்டுள்ளார்கள். 

கவுண்டமணி அதற்கு கறாராக வேண்டாம் என சொல்லியதோடு , போய் எல்லாரும் ஷூட்டிங்க பாருங்கப்பா, எனக் கூறவே படப்பிடிப்பு தொடர்ந்து நடந்துள்ளது. எனினும் அனைவரும் ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்ளலாம் என கேட்க , சரி ஆனால் மலர் செண்டோ , அன்பளிப்போ கிடையாது என கண்டீஷன்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

கவுண்டமணி ‘என்னய்யா விளம்பரம்’ அந்த சினிமாக்காரங்க தான் அப்படி செய்றாங்க, தனக்குத் தானே வால்போஸ்டர் அடிச்சு பிறந்தநாள் கொண்டாடிக்கிறாங்க’ என்ற தனது பிரபல காமெடி வசனத்திற்கு ஏற்ப இப்போதும் தனது சொந்த வாழ்க்கையிலும் அதே எளிமையுடன் இருப்பதாக படக்குழுவினர் கவுண்டமணி குறித்து புகழ்ந்து வருகிறார்கள். 

இன்றைய ஆண்ட்ராய்டு சூழலில் ரிங் டோனில் கூட அதிகம் வைக்கப்படும் திரைப்பட டயலாக்குகள் என்றால் அது கவுண்டமணியின் காமெடி வசனங்களாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு இப்போது இருக்கும் தலைமுறையினரும் கூட அவரது காமெடியை வெகுவாக ரசிக்கிறார்கள். மேலும் அவரது பிறந்தநாள் தினத்தில் #HappyBirthdayGoundamani என இப்போது இருக்கும் முன்னணி நடிகர்களின் பிறந்தநாளின் போது ரசிகர்களால் ட்விட்டரில் ட்ரெண்ட் உருவாக்கப்படுவது போல் அவரது பிறந்தநாள் தினத்தில் ட்ரெண்ட் உருவானது குறிப்பிடத்தக்கது.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close