Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’தல’ தீபாவளி..’தளபதி’ விநாயகர் சதுர்த்தி... அடுத்தடுத்து அதிரடியான விழாக்கள்!

’என்னை அறிந்தால்’ படத்தையடுத்து ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு செம பிஸியாக நடந்துகொண்டிருக்கிறது. படப்பிடிப்பில் அஜித்தோடு லட்சுமிமேனன், சூரி ஆகியோர் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். நாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.இசை அனிருத்

இந்தப்படத்தில் அஜித் டாக்ஸி டிரைவராக நடிக்கிறாராம். அஜித் தமிழகத்திலிருந்து கொல்கத்தா போய் டாக்ஸி ஒட்டிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு ஒரு தங்கை என கதை செல்கிறது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் படம் தீபாவளி வெளியீடு என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் ஷூட்டிங்குகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியானது. அதே சமயம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாள் சிறப்பாக வெளியாகும் என்ற நிலையில் படம் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் இந்த படத்தில் இரண்டு வேடத்திலும், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், தம்பி ராமையா, விஜயகுமார், என பெரும் நட்சத்திர பாட்டாளமே இருக்கும் இப்படத்தை இயக்குகிறார் சிம்பு தேவன். படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத். 

 'புலி’ படத்தின் ஆக்ஷன் காட்சிகள், விஜய் படங்களில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கே புதிதாக இருக்குமாம். ஹாலிவுட் ஆக்ஷன் படமான 'டை ஹார்டு’ பட ஸ்டன்ட் மாஸ்டர்களில் ஒருவரான சாங்லினை 'புலி’க்காகப் பிடித்து வந்திருக்கிறார்கள். இந்த வருடம் அடுத்தடுத்து விழாக்களில் விஜய் அஜித் படங்கள் வெளியாகி அவர்களது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையப் போவது குறிப்பிடத்தக்கது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close