Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈழத்தமிழராக நடிக்கிறார் சூர்யா!

மாஸ் என்று தொடங்கி மாஸ் என்கிற மாசிலாமணியாகி பின்பு மாசு என்கிற மாசிலாமணி ஆகியிருக்கும் இந்தப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. சூர்யாவின் ஒவ்வொரு படமும் அதற்கு முந்தைய படத்தைவிட அதிக திரையரங்குகளைப் பிடித்துக்கொண்டிருக்கும். இம்முறையும் அப்படித்தான் நடந்திருக்கிறது.

இந்தப்படத்தில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறை ஈழத்தமிழர் வேடத்தில் நடித்திருக்கிறாராம் சூர்யா. ஏற்கெனவே பாலாவின் நந்தா படத்தில் ஈழத்தமிழ்ப்பெண்ணைக் காதலித்தார். அதன்பின்னர் ஏழாம்அறிவு படத்தில் ஒருவனை பத்துப்பேர் சேர்ந்து அடிக்கிறது வீரமில்ல என்று வசனம் பேசி ஈழத்தமிழர்களுக்கு ஆறுதல் தந்தார். இப்போது அவரே ஈழத்தமிழராக நடித்திருக்கிறார் என்பதால் அவரை உலகம் முழுவதும் பெரியஅளவில் வரவேற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அவர் ஈழத்தமிழர் என்கிற ஒற்றைவரித்தகவல் மட்டுமே இப்போது வந்திருக்கிறது. அந்தப் பாத்திரத்தில் அவர் என்ன செய்யப்போகிறார்? என்பது பற்றிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. எப்படியும் நேர்மறையாகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close