Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலைப்புலி தாணுவுக்கு எதிராக ’லிங்கா’ விநியோகஸ்தர் மீண்டும் அறிக்கை!

ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படத்தின் பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை. படம் நஷ்டம் ஏற்பட்டதால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆரம்பத்தில் போர்க்கொடி தூக்கினர்.

பின்னர் லிங்கா படத் தயாரிப்பு தரப்பிலிருந்து ஒரு தொகை தரப்பட்டு பிரச்னையும் தீர்க்கப்பட்டது. எனினும் பணம் முழுமையாக வந்து சேரவில்லை என மீண்டும் பிரச்னை தலை தூக்கியுள்ளது. இந்நிலையில் இந்த பிரச்னையை தீர்த்துவைக்க வந்த கலைப்புலி தாணுவைக் குற்றம்சொல்லி அறிக்கை ஒன்றை ‘லிங்கா’ பட விநியோகஸ்தர் சிங்கார வேலன் வெளியிட்டுள்ளார்.

அதில் , 2009ம் ஆண்டு அவர் தயாரித்த ‘கந்தசாமி’ பட வெளியீட்டின் போது பேசிய தாணு, தான் ஒரு கிராமத்தை தத்தெடுத்து இருப்பதாகவும், அந்த கிராமத்திற்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து வருவதாகவும் அந்த கிராமத்தில் தன்னுடைய திருமண மண்டபத்தில் ஏழைகள் இலவசமாக திருமணம் நடத்தி கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தார். இந்த 6 வருட காலத்தில் அந்த கிராமத்திற்கு இவர் என்னென்ன உதவிகள் செய்துள்ளார் என்பதையும், எத்தனை ஏழை ஜோடிகளுக்கு அங்கு இலவச திருமணம் நடத்தி கொள்ள அனுமதி அளித்தார் என்பதையும் தெரிவித்தால் நான் சந்தோஷப்படுவேன்.

தலைவலியும் நோவும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள், ஆளவந்தான் படத்தில் இழப்பு ஏற்பட்டபோது ‘ ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான்’ என்று இவர் பேட்டி கொடுத்ததைப் போல லிங்காவில் இழப்பு ஏற்பட்டதற்கு மீடியாவின் துணையை நாங்கள் நாடுவது உங்களுக்கு ஏன் வருத்தத்தை தருகிறது. லிங்கா பிரச்னையில் திருப்பூர் சுப்ரமணி ஈடுபட்டிருக்கும் நிலையில் அவருக்கும் எங்களுக்கும் நடந்து வரும் பிரச்னையில் தாணு தலையிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close