Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஜிகர்தண்டா’ தயாரிப்பாளர் மீது கார்த்திக் சுப்புராஜ் வழக்கு!

ஜிகர்தண்டா படத்தின் இந்தி உரிமையை தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் விற்பதாக கார்த்திக் சுப்புராஜ் அவர் மீது வழக்கு பதிந்துள்ளார்.

ஜிகர்தண்டா படத்தின் இந்தி உரிமையை என்னை கேட்காமல் விற்க முயற்சிப்பதாக கார்த்திக் சுப்புராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் சங்கத்தில் புகார் தெரிவித்தார். தற்போது இந்த பிரச்னை காரணமாக கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் கடிதம் ஒன்றையும் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.

அக்கடித்தத்தில், திரு எஸ்.கதிரேசனுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப் படி , இந்தி, மொழிமாற்று உரிமத்தில் 40% எனக்கு தர வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் சமீபத்தில், திரு எஸ்.கதிரேசன் அவர்கள் , எனக்கு தெரியாமல் இந்த திரைப்படத்தின் உரிமையை விற்க முயல்வதாக அறிந்தேன் . தமிழ் நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தில் இந்த பிரச்னையை பதிவு செய்தேன். பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக பிரச்னையை நாலு சுவற்றுக்குள் முடிக்கலாம் என கூற பல முறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆயினும் எஸ்.கதிரேசன் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழையாமல் போகவே சுமூகமான பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

எனவே இயக்குநர் சங்கத்தின் ஆலோசனையோடு வேறு வழியில்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தேன். சென்னை உயர் நீதிமன்றம் இப்போது படத்தின் மொழி மாற்று உரிமத்தை விற்பதற்கு தடை விதித்துள்ளனர். இது சம்பந்தமாக என் வழக்கறிஞர் கொடுத்த அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது, சென்னை உயர் நீதிமன்றம் 21 மே 2015 அன்று கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கிய சித்தார்த் மற்றும் லட்சுமி மேனன் நடித்த பல கோடி வசூல் செய்த ‘ஜிகர்தண்டா’ திரைபடத்தின் மொழிமாற்று உரிமையை விற்க தடை விதித்துள்ளது. 11 ஜூன் 2015 வரை கார்த்ஹிக் சுப்புராஜ், பைவ் ஸ்டார் திரைப்பட நிறுவன அதிபர் எஸ்.கதிரேசன் மேல் கொடுத்த ஒப்பந்தமீறல் மற்றும் பதிப்புரிமை மீறல் புகாரின்பேரில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி திரு ர.மாதவன் அவர்கள், பணம் கொடுக்கல் விதி மற்றும் ஒப்பந்தம் மீறல் மூலமாக விளையக்கூடிய பதிப்புரிமை மீறலின் மேல் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

11, ஜுன் 2015வரை கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த பதிப்புரிமை மீறல் புகாரின் அடிபப்டையில் எந்தவொரு விதத்திலும் இத்திரைப்படத்தின் பிற மொழி உரிமத்தை விற்கவோ, விளம்பரபடுத்தி இந்தி மற்றும் ஏனைய மொழிகளில் விற்க முயற்சிக்கவோ கூடாது என்று தடை பிறப்பித்துள்ளார். தயாரிப்பாளருக்கும் இத்தடை உத்தரவை அனுப்பி வைத்துள்ளார். மேலும் அவர்கள் தரப்பு பதிலையும் கோரியுள்ளார். இவ்வாறு அந்த கடிதத்தில் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close