Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாபநாசத்தை முந்துகிறதா த்ரிஷ்யம்?

மோகன்லால், மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி 150 நாட்களுக்கும் மேல் ஓடி ஹிட் அடித்த படம் த்ரிஷ்யம். இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கினார். ஆஷா சரத் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். படத்தின் வலிமையும், பொருளாதார வெற்றியும் அடுத்தடுத்து ஒவ்வொரு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

மலையாளத்தைத் தொடர்ந்து கன்னடத்தில் வி.ரவிச்சந்திரன், நவ்யாநாயர் நடிப்பில் த்ரிஷ்யா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடிப்பில் த்ருஷ்யம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் போலீஸ் அதிகாரியாக நதியா நடித்திருப்பார். வெளியான மூன்று மொழிகளிலுமே பேசப்பட்ட படமாக மாறியது த்ரிஷ்யம்.

அந்த நேரத்திலேயே தமிழிலும், ஹிந்தியிலும் ரீமேக் செய்யும் வேலைகள் ஆரம்பமாகின. தமிழில் கமல்ஹாசன், கெளதமி நடிப்பில் “பாபநாசம்” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு படம் வெளிவர தயாராகவிருக்கிறது. இதற்கு நடுவே இந்தியிலும் படம் ரெடியாகிவிட்டது. இந்தியில் அஜய், ஸ்ரேயா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தியில் தபு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

பாபநாசம் படத்தில் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. இதற்கு நடுவே இந்தியில் த்ரிஷ்யம் ஜூலை 31ல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னரே பாபநாசம் வெளியாகுமா? என்பதே இப்போதைக்கு ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close