Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனுஷ்கா ஹேப்பி !

 இப்போது இருக்கும் நாயகிகளை உடல் எடை குறைக்கச் சொன்னால்  எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெட்டு குறைத்து விடுவார்கள். ஆனால் எடை கூட்டச் சொன்னால் கொஞ்சம் கஷ்டம் தான். அந்த வகையில் திடீரென அனுஷ்கா 15 கிலோ எடை கூடியுள்ளாராம். இன்னும் வெயிட் போட வேண்டியுள்ளது என திடுக்கிட வைக்கிறார்கள்.

கொஞ்சம் கூட கூச்சமே படாமல் சாப்பிடுகிறாராம், மேலும் பின்பற்றி வந்த டயட்டுகளையும் இப்போது விட்டுவிட்டாராம். அதே போல் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதையும் சுத்தமாகவே விட்டுவிட்டாராம். இது அனைத்தும் ஆர்யா, அனுஷ்கா இணைந்து நடிக்கும் படமான ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக என்பதுதான் ஆச்சர்யம். 

ஏனெனில் ஒரு ஹீரோயின் எடை குறைப்பதை கூட விரும்பி செய்வார்கள், எடை கூடி மீண்டும் அடுத்தடுத்த படங்களுக்காக குறைப்பது என்பது கொஞ்சம் சிரமமே. படத்தின் கதைப்படி ஒல்லியான , ஸீரோ ஸ்ட்ரக்சர் மோகம் அதை சுற்றிய கதையாக படம் அமைந்துள்ளதால் இப்படி வெயிட் போட்டு வருகிறாராம்.

படத்தை பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் கோவெல முடி இயக்கும் இப்படத்தில் அனுஷ்கா குறித்து இயக்குநர் பேசுகையில், இப்போது அனுஷ்கா ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறார். விரும்பியதை சாப்பிடுகிறார். எனினும் ஆரோக்கியமான உணவுகளையே தேடித் தேடி சாப்பிடுகிறார். என அனுஷ்கா குறித்து கூறியுள்ளார் படத்தின் இயக்குநர். என்ன ஒரு டெடிகேஷன்! 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close