Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரத்குமார்- விஷால் மோதல் தொடருகிறது?

விஷால், புதுக்கோட்டை நாடகநடிகர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்ததும், நடிகர்சங்கம் பரபரப்பாகிவிட்டதெனச் சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் விஷால் தவறான கருத்துகளைத் தெரிவித்து வருவதாகச் சொல்லியிருந்தார்.

அதுகுறித்து விஷால் பதிலேதும் சொல்லவில்லை என்றாலும், அவர்களுக்குள்ளான மோதல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்றே சொல்கிறார்கள். விரைவில் நடிகர்சங்கத்துக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறதாம். அதையொட்டியே இந்த மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள்.

நடிகர் சங்கத்தேர்தலில் ஓட்டுப்போடும் தகுதியுடையவர்களில் நிறையப்பேர் நாடகநடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர்களை நேரடியாகச் சந்தித்து நிலைமைகளை விளக்கிச் சொல்ல முடிவெடுத்திருக்கிறார்களாம்.

இதுபற்றி விஷால் தரப்பில், ஒரு கூட்டத்தில் பேசும்போது இளைஞர்கள் விருப்பப்படி நடக்கும் என்று தலைமைப்பொறுப்பில் இருக்கிறவர்கள் சொன்னார்கள், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை, எனவே எங்கள் பயணம் தொடரும் என்று சொல்கிறார்கள். விஷால் அணியில் நடிகர் நாசர் அல்லது சிவகுமாரை தலைவர் பொறுப்புக்கு நிறுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. புதுக்கோட்டையை அடுத்து மதுரையிலுள்ள நாடக நடிகர்களையும் சந்தித்துப் பேசும் திட்டத்தில் இருக்கிறதாம் விஷால் தரப்பு.

அந்த மதுரைக்கூட்டத்தின்போது விஷாலுடன் இன்னும் நிறையநடிகர்கள் பங்குபெறவிருக்கிறார்கள் என்றும் அதற்கான எற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அடுத்த நடிகர்சங்கத்தேர்தல் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று திரையுலகில் பரவலான பேச்சு இருக்கிறது.
 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close