Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்பாவாக நடிக்கிறாரா விஜய் .... விஜய் 59 அப்டேட்?

 அட்லீயின் முந்தைய படமான ‘ராஜா ராணி’ குடும்ப படமாக காதல், கல்யாணம் என அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இயக்கும் விஜய் படமும் குடும்பப்படம் என கோலிவுட்டில் தகவல்கள் கசிந்து வருகின்றன. 

இந்த படத்தில் ‘சைவம்’ படத்தின் அழகே பாடல் பாடிய உத்தரா உன்னிகிருஷ்ணன் குரலில் ஒரு பாடல் இருப்பதை சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதன்மூலம் படத்தில் ஒரு குழந்தையின் கேரக்டர் முக்கிய பாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

தற்போது அடுத்த தகவலாக விஜய் இந்த படத்தில் அப்பாவாக நடிக்கிறார் என கிசுகிசுக்கப்படுகிறது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்யின் ‘புலி’ படத்தின் படப்பிடிப்புகள் யாவும் முடிந்துவிட்ட நிலையில் விஜய் குடும்பத்தாருடன் ஓய்வெடுக்க ஐரோப்பா செல்லவிருக்கிறாராம்.

அங்கிருந்து திரும்பியவுடன் ‘புலி’ படத்தின் டப்பிங் மற்றும் அட்லீ படம் என ஒரே நேரத்தில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் 59வது படமான இதில் சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். படம் ஜூலை மாதம் துவங்கப்பட உள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close