Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பல வருடங்களாக ரஜினி நடிக்க ஒரு படத்தை தான் தயாரிக்க வேண்டும் என்ற கனவில் இருந்த கலைப்புலி எஸ்.தாணுவிற்கு தற்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ’அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி அடுத்து ஒரு படத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன.

இந்நிலையில் படக்குழு இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். படத்தில் ஹீரோ ரஜினி என்பது யாவரும் அறிந்ததே. மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. கதாநாயகி உட்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது

.

இப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார். ’மெட்ராஸ்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் கபிலன், உமாதேவி, கானா பாலா, கலை, இயக்கம் ராமலிங்கம், படத்தொகுப்பு - பிரவீன் கே.எல். ,சண்டைப்பயிற்சி அன்பு ,அறிவு, நடனம் - சதீஷ், ஒலி வடிவமைப்பு ரூபன்.

ஆகஸ்ட் மாதம் மலேஸியாவில் படப்பிடிப்பு தொடங்கி, 60 நாட்கள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து தாய்லாந்து, ஹாங்காங்க் மற்றும் சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. தற்போது இப்படத்தின் அடுத்த கேள்வி ஹீரோயின் , மற்ற நடிகர்கள் யார் என்பதே. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்