Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சந்தானத்தின் வளர்ச்சிக்கு டிப்ஸ் கொடுத்த ஆர்யா, சிம்பு!

அடுத்தடுத்து ஹீரோவாக படங்களை கொடுத்துவருகிறார் சந்தானம். அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் இனிமே இப்படித்தான்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்த அஷ்னாவ்சவேரி, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த அகிலா கிஷோர் என்று இரண்டு ஹீரோயின்களுக்கு சிங்கில் ஹீரோவாக சந்தானம் நடிக்க, அவரின் ஹண்ட் மேட் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.  சந்தானத்தின் படங்களுக்கு ஸ்கிரிப்ட் உதவியாளர்களாக இருந்த முருகன் மற்றும் பிரேமானந் இருவரும் சேர்ந்து முருகானந்த் என்ற பெயரில் இப்படத்தினை இயக்கியிருக்கிறார்கள்.

இனிமே இப்படித்தான் பட பத்திரிகையாளர் சந்திப்பில் சந்தானம் பேசும் போது, “ நிலம் வாங்கி ரிஜிஸ்டர் பண்ணுறாங்களோ இல்லையோ படத்தோட டைட்டில் மட்டும் சீக்கிரமா ரிஜிட்டர் பண்ணிடுறாங்க. அந்த அளவுக்கு படம் தாயாரிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு உணர்ந்தேன். வாழ்க்கையில வேகமா முன்னேறனும்னா மெதுவா அதற்கான வேலையை செய்யனும். அப்படி மெதுவா தான் இந்த கதையை நாங்க உருவாக்குனோம். அதுக்குனு அவதார், ஜுராசிக் வேர்ல்டுனு நினைக்க வேண்டாம். இயல்பான காமெடிக்கு முக்கியத்துவமான படம் அவ்வளவு தான்.

ஹீரோவா நடிக்க ஆரம்பித்துவிட்டேன் என்பதால் என் ஃபிட்னெஸ்க்கு ஆர்யாவும், என்னோட காஸ்ட்யூம்க்கு சிம்புவும் டிப்ஸ் நிறைய குடுப்பாங்க, என்று தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கும் பதிலளித்தார் சந்தானம், 

தொடர்ந்து காமெடி ஹீரோவாகவே நடிக்கிறீங்க, ஆக்‌ஷன் ஹீரோவா எப்போ பார்க்கலாம்?

“என் படத்தில் காமெடி தான் முக்கியமா இருக்கும். ஆனாலும் ஆக்‌ஷன் கலந்துதான் இருக்கும். அந்த ஆக்‌ஷன்லயும் காமெடி இருக்கும்.”

தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்கிறீங்களே, இனி காமெடியனா நடிக்க மாட்டீங்களா?


“எனக்கு யாரெல்லாம் நம்பிக்கையான ஆட்களாக இருக்கிறார்களோ அவர்களுடன் மட்டும் காமெடியனாக நடிப்பேன்.” 

உதயநிதியோட கெத்து படத்துல நீங்க இல்லையே?

வரிசையா உதயநிதியோட படம் பண்ணியாச்சி. ஒரு இடைவெளி இருந்தா நல்லா இருக்கும். கெத்துலையும் எனக்கான கதாப்பாத்திரம் இல்லை அதுனால நடிக்கவில்லை.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close