Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்சேதுபதியின் ஆரஞ்சுமிட்டாய் வெளிவரத் தாமதம் ஏன்?

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரவிருப்பதாகச் சொல்லப்படுகிற படம் சீனுராமசாமி இயக்கியுள்ள இடம்பொருள்ஏவல். அதற்கு முன்பாகவே வெளியாகும் என்று சொல்லப்பட்ட ஆரஞ்சுமிட்டாய் என்னவாயிற்று?

விஜயசேதுபதியே தயாரித்திருக்கும் அந்தப்படத்தை பிஜூவிஸ்வநாத் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்தஆண்டின் தொடக்கத்திலேயே வெளியாகும் என்று சொல்லப்பட்ட அந்தப்படம் இன்றுவரை வெளியாகவில்லை. விஜயசேதுபதியின் தயாரிப்பு என்பதால் எந்தச்சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை அப்படியிருந்தும் அந்தப்படம் வெளிவராமல் இருக்கக்காரணம் படத்துக்கு வியாபாரம் இல்லை என்பதுதானாம்.

விஜயசேதுபதி படம் வியாபாரமாகாமல் இருக்கமுடியாதே? என்றால் அதற்கும் காரணம் இருக்கிறதாம். படத்துக்கு இவர்கள் சொல்லும் விலை மிகவும் அதிகம் என்பதால்தான் படம் வியாபாரம் ஆகாமல் இருக்கிறதென்கிறார்கள். விஜயசேதுபதியின் சம்பளம் இல்லாமல் இந்தப்படத்தின் தயாரிப்புச் செலவு மிகவும் குறைவுதான் என்றும் ஆனால் படத்துக்காக இவர்கள் சொல்லும் வலை மிகவும் அதிகம் என்றும் சொல்கிறார்கள்.

வரிசையாகப் படங்களை வாங்கி வெளியிடும் நிறுவனமொன்று இந்தப்படத்தை மொத்தமாக வாங்கி வெளியிட முன்வந்ததாம். ஆனால் இவர்கள் சொன்னவிலையைக் கேட்டுவிட்டுப் பின்வாங்கிவிட்டார்களாம். சுமார் ஒன்பதுகோடி விலை சொல்வதாகவும் ஏழுவரை விலைகேட்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால்தான் படவெளியீடு தாமதமாகிறது என்றும் சொல்லப்படுகிறது. 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close