Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடிகர்சங்கச் சிக்கலுக்கு முடிவுகட்ட சமரசப்பேச்சு?

விஷால் புதுக்கோட்டைக்குப் போய்வந்த பிறகு நடிகர்சங்கச் சிக்கல் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது. சரத்குமார் அறிக்கை, நாசர் கடிதம், விஷால் கேள்விகள் என்று போய்க்கொண்டிருக்கும் இந்தச் சிக்கலில் இப்போது மற்றவர்கள் தலையிட்டு சமரசம் பேசும் படலம் தொடங்கவிருக்கிறதாம்.

இது தொடர்பாக விஷாலிடம் தயாரிப்பாளர்கள்சங்கத்தலைவர் தாணு பேசவிருப்பதாகத் தெரிகிறது. இன்றைக்கு அந்தப்பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்பேச்சுவாத்தையில் விஷாலும் நாசரும் கலந்துகொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது. தாணு மற்றும் டி.சிவா ஆகியோர் இவர்களோடு பேசி இவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டுக்கொண்டு அதன்பின் சரத்குமார் உள்ளிட்டவர்களோடு பேசவிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சமரசப் பேச்சுவார்த்தைக்குத் தொடக்கத்திலிருந்தே விஷால் தரப்பு உடன்படவில்லையாம். ஆனாலும் திரையுலகுக்குள் நடக்கம் இந்தச்சிக்கல் பொதுவெளிகளில் அதிகமாகப் பேசப்பட்டுக்கொண்டிருப்பதை விரும்பாத பலரும் இது தொடர்பாகப் பேசியபோது, எங்களுடைய கோரிக்கைகளில் ஏதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள் என்று விஷால் தரப்பினர் கேட்பார்களாம்.

அதனால் சமரசப் பேச்சுக்கு வாய்ப்பு இல்லாமலே போய்விட்டதாம். இப்போது வேந்தர்மூவிஸ் தயாரிக்கும் பாயும்புலி படத்தில் விஷால் நடிப்பதால் அந்த நிறுவனத்தின் தொடர்பில் இருக்கும் தயாரிப்பாளர் டி.சிவா, விஷாலிடம் தொடர்ந்து பேசி அவரைப் பேசுவதற்கு அழைத்து, இந்தப்பேச்சுவார்த்தைக்கு முன்னிற்பதாகவும் சொல்லப்படுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்