Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஜித் படத்தில் விநாயகர் சதுர்த்தி பாடல்!

அஜித்தின் வான்மதி படத்தின் பிள்ளையார் பட்டி ஹீரோ நீதான் பாடல் இப்போதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம். அதே போல் ‘அமர்களம்’ படத்தின் காலம் கலிகாலம் பாடலும் சரி அப்பாடலின் மூலம் அறிமுகமான லாரன்ஸும் சரி எவ்வளவு ஹிட் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 

இந்நிலையில் 16வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித் படத்தில் விநாயகர் சதுர்த்தி பாடல் இடம்பெற இருக்கிறதாம். ‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் தல 56 படத்திற்கு இசை அனிருத். இப்படத்திற்கு தான் இசையமைப்பது குறித்து ஏற்கனவே அனிருத் யூடியூப்பில் வீடியோவாக வெளியிட்டு அறிவித்தார். 

இப்படத்திற்கு தற்போது இரண்டு பாடல்கள் தயாராகிவிட்டன. அதில் ஒன்று விநாயகர் சதுர்த்தி பாடல் எனவும் அது படத்தின் ஓபனிங் பாடல் எனவும் கூறப்படுகிறது. ஷோபி மாஸ்டர் நடன அமைப்பில் 150 நடன கலைஞர்கள் சூழ இப்படத்தில் ஒரு பாடல் இடம்பெற உள்ளதாம்.அந்த பாடல் இந்த பாடலாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த பாடலில்  லட்சுமி மேனன் மற்றும் சூரி ஆகியோரும் இடம்பெற உள்ளனர் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். அஜித் டாக்ஸி டிரைவராக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்