Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி படத்தில் நயன்தாரா கண்டிப்பாக இல்லை!

ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானாலும் இன்னும் ரஜினி படத்தின் கதாநாயகி யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

நயன்தாராவிடம் பேசிவருவதாகவும், இவரே கதாநாயகியாக நடிப்பார் என்று பல செய்திகள் தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் உலாவ ஆரம்பித்தன. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர்.

ரஜினியை வைத்து நீண்ட நாளாகவே படம் தயாரிக்க வேண்டும் என்று விரும்புய கலைப்புலி எஸ்.தாணுவிடமே யாரு ரஜினி படத்தின் ஹீரோயின் என்று கேட்டதற்கு, “ நயன்தாரா கண்டிப்பாக இல்லை. கதாநாயகி யாரென்பது இன்னும் முடிவாகவில்லை. மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக்கலைஞர்களை அறிவிக்கும் போதே ரஜினி பட கதாநாயகி யாரென்பதையும் அறிவிப்போம்”  என்று கூறியுள்ளார்.

அப்படியானால் நயன்தாரா ரஜினி படத்தில் இல்லை  என்று தாணு கூறிவிட்டதால் யார் ரஜினியின் அடுத்தப் படத்தின் கதாநாயகி என்பதே இப்போதைய ரஜினி ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close