Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஷால், லிங்குசாமி இணையும் சண்டக்கோழி2 என்னாச்சு?

 இயக்குநர் பாண்டிராஜ் இப்போது 'ஹைக்கூ' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறார். அதைத்தொடர்ந்து இதுநம்மஆளு படத்தின் மீதிப்படப்பிடிப்பு மற்றும் அதற்குப் பிறகான வேலைகளும் இருக்கின்றன.

அதன் பின்னர் விஷால் நடிக்கும் புதியபடத்தை இயக்கப்போவதாகச் சொல்லியிருந்தார். விஷாலும் இப்போது சுசீந்திரன் இயக்கும் பாயும்புலி படப்பிடிப்பில் இருக்கிறார். அந்தப்படம் முடிந்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதாகச் சொல்லப்பட்டது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்று சொல்லவில்லை என்றாலும் இன்றைக்கு அந்தப்படத்துக்கான பூஜை மிக எளிமையாக நடந்திருக்கிறது. படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

விஷால் அடுத்து இந்தப்படத்தின் படப்பிடிப்புக்குப் போய்விட்டால், லிங்குசாமி இயக்கும் சண்டைக்கோழி இரண்டாம் பாகம் படம் என்னவாகும்? அதில் அவர் நடிக்கப்போவதில்லை என்றொரு தகவல் உலவிக்கொண்டிருந்ததே, அது உண்மையாகிவிட்டதா? என்று கேட்டால், அது உண்மையில்லை என்கிறார்கள்.

இப்போது, சண்டைக்கோழி இரண்டாம்பாகத்துக்கான திரைக்கதையை முடித்துவிட்டு வசனங்கள் எழுதும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறாராம் இயக்குநர் லிங்குசாமி. அந்தவேலைகளும் விரைவில் முடிந்துவிடும். அதன்பின் அந்தப்படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அதன்பின் ஒரேநேரத்தில் இவ்விரு படங்களிலும் விஷால் நடிப்பார் என்று சொல்கிறார்கள். சுசீந்திரன் படத்துக்கு அடுத்து லிங்குசாமி படம் தொடங்கும் என்கிற முந்தைய திட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அந்தப்படமே இல்லை என்பதுபோலப் பேச்சு வந்துவிட்டது என்கிறார்கள். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close