Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இவருக்குப் பின்னாடிதான் அஜித்!

ல சாதாரண மெக்கானிக்கா இருந்து இந்த அளவுக்கு முன்னேறி இருக்கார்’ என அஜித் புகழ் பாடும் நம்மில் பலருக்கு ரஜினி கிருஷ்ணனைத் தெரியுமா? ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் எல்லாம் இல்லை. சென்னையைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் உலக சாம்பியன்.

அரும்பாக்கத்தில் மெக்கானிக்காக இருக்கும் இந்த உலக சாம்பியனிடம் பேசினேன். ‘‘1999-ம் வருஷம் பைக் ரேஸைப் பார்த்துட்டு வருவோமேனு ஃப்ரெண்ட்ஸ்களோட இருங்காட்டுக்கோட்டைக்கு விசிட் அடிச்சேன். சீறிப்பாயிற அந்த ‘வ்ர்ர்ரூம்’ சத்தத்துல அப்படியே மயங்கிட்டேன். நாம ஒரு பைக் ரேஸரா ஆகணும்னு, அன்னக்கி முடிவு பண்ணேன். கடையில வர்ற சொற்ப வருமானம் என்னோட கனவுக்கு இடம் கொடுக்கலை. கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து ரேஸ் பைக்கை ரெடி பண்ணேன். நண்பர்கள் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ‘உனக்கு எதுக்கு வேண்டாத வேலை. பெரிய அஜித்துனு நினைப்போ? இதெல்லாம் பணக்காரங்களோட கேம்’னு கிண்டல் பண்ணாங்க. அவங்க சொன்ன மாதிரியே ஆரம்பத்துல என்னோட தோற்றத்தையும் என்னோட பேச்சையும் வெச்சு ‘எங்கேருந்துதான் வர்றாங்களோ?’னு காதுபடவே கமென்ட் அடிச்சாங்க. ஆனா, கிடைச்ச சின்னச் சின்ன வாய்ப்புல நம்பர் ஒன்னா வந்ததும், ‘அட யாருடா இவன் புதுசா இருக்கானே’னு ஏத்துக்கிட்டாங்க. முட்டி மோதி என்னை நிரூபிச்சு ஒரு ரேஸரா வந்தேன். பத்து வருஷம் கடுமையான பயிற்சி, உழைப்புனு செதுக்கி செதுக்கி 2009-ல இந்தியாவுல நடந்த ஏஷியன் ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிப்ல நம்பர் ஒன் வந்தேன்.

அது சர்வதேச ரோடு சாம்பியன்ஷிப்புக்கானது. ஓர் இந்தியர் அந்தக் கோப்பையைக் கைப்பற்றியது அதுதான் முதல் தடவை. ஏஷியன், கத்தார்ல சாம்பியன் பட்டம் வென்றேன். கத்தார்ல நடக்கிற அந்த ரேஸ் மிக சவாலானது. இரவில் நடக்கும் அந்த ரேஸில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை 2013-ல் வாங்கினேன். மலேஷியன் சூப்பர் சீரிஸ் சாம்பியன்ஷிப், பெட்ரோனாஸ் ஏஷியன் சாம்பியன்ஷிப்னு லிஸ்ட் பெருசாச்சு. 1000 சிசி பிரிவுல கத்தார்ல போன வருஷம் நடந்த போட்டியில கலந்துக்கிட்டு வெண்கலப் பதக்கம் வாங்கினேன். இத்தனை வருஷம் மெக்கானிக்கா கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ரேஸ்ல கலந்துக்கிட்ட எனக்குப் போன வருஷம் இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் டீமான க்யூஎம்எம்எஃப் ஸ்பான்ஷர்ஷிப் கெடைச்சது.

எல்லாப் புகழும் என்னோட செல்லம் யமஹா ஆர்1-க்கும் என் அம்மாவுக்கும்தான் சேரும்’’ என்று சொல்லும் ரஜினி கிருஷ்ணனுக்கு 33 வயது. இவரது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஒரு இயக்குநர் முயன்று வருவதாகச் சொன்னார்.

‘‘அஜீத் பற்றி சொல்லவே இல்லை? ஒண்ணா போட்டிகள்ல கலந்திருக்கீங்களாமே?’’ ‘‘அவர் ரொம்ப நல்ல மனிதர். வேற என்ன சொல்லணும்?’’ என்று சிம்பிளாக ஒதுங்கிக்கொண்டாலும் இந்தியாவின் மிக வேகமான மனிதன் எனக் கொண்டாடப்படும் ரஜினி கிருஷ்ணன் கலந்துகொண்ட சர்வதேசப் போட்டியில் அஜீத் 27-வது இடம் பிடித்தபோது, இவர் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார்.

சூப்பர் தல!

- ஆர்.சரண்-

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close