Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறப்பு விருந்தினராக சூர்யா...நாளை பிரம்மாண்ட ’பாகுபலி’ தமிழ் டிரெய்லர் வெளியீடு!

’நான் ஈ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘பாகுபலி’ இப்படத்தின் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி சூர்யா ,ஆர்யா இந்தியின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்ட பல பிரபலங்கள் படத்தின் டிரெய்லர் குறித்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

இதுவரை படத்தின் டிரெய்லரை மட்டும் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சமீபத்தில் படத்தின் தெலுங்கு டிரெய்லர் வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. அதில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா டகுபதி , ராஜமௌளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தற்போது படத்திற்கு உருவாகியுள்ள எதிர்பார்ப்புகளையொட்டி தமிழ் டிரெய்லரையும் பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழு. நாளை இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் சூர்யா, அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபதி, பிரபாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் சூழ வெளியிட உள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close