Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என் ஆதரவு விஷாலுக்குத்தான்... மன்சூர் அலி கான் அதிரடி!

 நடிகர் சங்கம் குறித்து சரத்குமார், விஷால் என இரு தரப்பாக பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கையில் தற்போது மன்சூர் அலி கான் தனிப்பட்ட முறையில் தனி சங்கமாக டாப்சி என்ற சங்கத்தை உருவாக்கியுள்ளார் . இதுகுறித்த திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. 

அதில் பேசும் போது, நான் நடிப்பதே 4 அமாவசைக்கு ஒரு தடவைதான். இதில் என் படங்களுக்கு பெப்சி ஒத்துழைப்பு அளிக்கப்போவதில்லை என செய்தி வந்திருக்கிறது. அதையொட்டிதான் இந்த கூட்டம். பாலிவுட்டைக் காட்டிலும் தரமான உழைப்பாளர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பெப்சியில் உள்ளனர். என பேசிய மன்சூர் அலி கானிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும், 

என்ன இருந்தாலும் பெப்சி என்ற பொதுவான அமைப்பு இருக்கையில் நீங்களாக எப்படி புதிய சங்கத்தை துவங்க முடியும்?

பெப்சியின் செய்லபாடுகள் எப்படி என 50 - 60 வருடங்களாக நீங்களும் கேள்வி பட்டிருப்பீர்கள், இப்போது நான் கேட்கிறேன் ’திமுக’விலிருந்து அதிமுக வரவில்லையா, அதே போல் தான் , இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை விஜய் சேதுபதியையும், லட்சுமி மேனனையும் நமக்கு தெரியுமா? 

அவர்களும் நடிகர் சங்க உறுப்பினர்கள் தானே?

நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாகிவிட்டா அவர்கள் நடிக்க வந்தனர். கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கும், பணத்தை வாங்கிக் கொண்டு உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் தான் இப்போது சங்கம் இருக்கிறது. நடிகர் சங்கம் செத்து போய் விட்டது. பழம்பெரும் நடிகர் நடிகையர் மரணம் கூட தொலைக்காட்சிகளில் பார்த்து தான் தெரிந்துகொள்ள வேண்டி உள்ளது. ஒரு தகவல் கூட தெரிவிப்பதில்லை. 

நடிகர் சங்க தேர்தல் அறிவித்துள்ளார்களே? உங்கள் ஆதரவு யாருக்கு?

நடிகர் சங்க தேர்தலில் என்னுடைய ஆதரவும், என் சங்கத்தினரின் ஆதரவும் விஷாலுக்குத் தான். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்