Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”த்ரிஷா இல்லனா நயன்தாரா” படம் வெளியிட உயர்நீதி மன்றம் தடை

”த்ரிஷா இல்லனா நயன்தாரா” படம் வெளியிட உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.”த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தின் தயாரிப்பாளர் திரு.சி.ஜெ.ஜெயக்குமார், ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.75 லட்சம் வரை பாக்கி தர வேண்டியிருக்கிறது.

திரு.சி.ஜெ.ஜெயக்குமார் தந்த காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டது. இந்நிலையில், பணம் வேண்டியும், தன் பணத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ”த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தை வெளியிடவோ, விற்கவோ கூடாது எனவும், ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 4.6.2015-க்குள் கடன் தொகை செலுத்த திரு.சி.ஜெ.ஜெயக்குமார் உறுதியளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் ”த்ரிஷா இல்லனா நயன்தாரா” படம் ஜப்தி செய்யப்படும் எனவும் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.

4.6.2015 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. கடன் தொகைக்கு திரு.சி.ஜெ.ஜெயக்குமார் உரிய உறுதியளிக்கவில்லை. எனவே, இரண்டு வாரத்திற்குள் ரூ.75 லட்சம் பாக்கிக்கு ஈடாக சொத்து தரவேண்டும் என்றும் . ”த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தை வெளியிட தடைவிதித்தும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக வழக்கறிஞர் என்.ரமேஷ் வாதிட்டார்."

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close