Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது பழி கூடாது: சொல்கிறார் குஷ்பு !

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த பிரபலங்கள் மீது பழி போடக் கூடாது என்று குஷ்பு டிவிட்டரில் கூறியுள்ளார். மேகி நூடுல்ஸ் உணவு விளம்பரங்களில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய, பீகார் மாநிலத்தின் முஷாஃபர்பூர் மாவட்ட நீதிமன்றம் கடந்த 2 ஆம் தேதியன்று உத்தரவிட்டது.

வழக்கு விசாரணைக்குத் தேவைப்பட்டால் அமிதாப் பச்சன் உள்ளிட்ட 5 பேரையும் காவல் துறை கைது செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் திரைத்துறையில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின் பிரபல ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றும் நடிகை ராதிகா, அந்தக் கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் தொழில் ரீதியானது மட்டுமே, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றும் அதிரடியாக அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார்.

இப்போது இதுதொடர்பாக நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: " நெஸ்ட்லே போன்ற ஒரு நிறுவனத்தின் உணவுப்பொருளை உணவு அமைப்பு அங்கீகரித்த பின்பே அது கடையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் மீது எப்படி பழிபோடுவீர்கள்? கடையில் ஒரு பொருள் விற்கப்படுவதற்கு முன்பு அதைச் சோதனை செய்யமாட்டார்களா? அல்லது அதை நாம் தலைகீழாகத்தான் செய்வோமா? முதலில் பொருள் வாங்கப்பட்டு, உடல்நலக் குறைவு ஏற்பட்டபிறகு சோதனை செய்வோமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close