Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆகஸ்ட் 14ல் VSOP?

 ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. படத்திற்கு இசை டி.இமான். படத்தை ஆர்யாவின் தி ஷோ பிபிள் நிறுவனமே தயாரித்து வருகிறது.

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் , மற்றும் எடிட்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. முழு படத்தையும் சென்னை, சென்னையை சுற்றிய பகுதிகள் என படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். மேலும் படத்தின் டப்பிங் வேலைகளில் உள்ள ஆர்யா ‘ மாடுலேஷன் மாடுலேஷன்னே சாவடிக்கிறான்’ என ராஜேஷை செல்லமாக திட்டி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

இறுதிகட்டமாக இன்னும் ஓரிரு திங்களே படப்பிடிப்பு உள்ளது என ட்வீட் செய்துள்ள ஆர்யா படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். படம் ஆகஸ்ட் 14ம் தேதி சுதந்திர தின சிறப்பாக வெளியாக உள்ளது என ட்வீட் செய்துள்ளார். இவர்களது கூட்டணியில் அமைந்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் வெற்றி நாமறிந்தே. அதே பாணியில் இந்த படமும் காமெடியாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close