Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஒளிரும் ஈரோடு' : மற்ற மாவட்டங்களும் பின்பற்ற நடிகர் சூர்யா வேண்டுகோள்!

ஈரோடு: நம்முடைய மண், தொழில், உறவு எல்லாவற்றிலும் அதீத அன்பு, அதீத காதல், அதீத பிரியம் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம செய்யுற எந்த விஷயமும் வெற்றிகரமாக அமையும் என்று நடிகர் சூர்யா பேசினார்.

ஈரோட்டில் தொழிலதிபர்கள் பலர் ஒன்றிணைந்து 'ஒளிரும் ஈரோடு' என்கிற அமைப்பை துவங்கியுள்ளனர். கலாச்சாரம், நன்னெறி, கல்வி, உடல்நலம் ஆரோக்கியம், நீர் நிர்வாகம், சுகாதாரம், உள்கட்டமைப்பு உள் ளிட்ட பணிகளை அரசின் உதவியோடு செய்யப்போவதாக அறிவிக்கப்பட்ட இந்த அமைப்பின் துவக்கவிழா நேற்று நடைபெற்றது.

இதனை துவக்கி வைத்து பேசிய நடிகர் சூர்யா “ இவ்வளவு பேரும் ஒன்று சேர்ந்து ஈரோட்டை மாற்றி காமிக் கிறோம் பாருங்கள் என்று இங்கு கூடியிருக்கிறோம். ரெண்டு மாதத்துக்கு முன்னாடி 'ஒளிரும் ஈரோடு' என் கிற புதிய அமைப்பை ஏற்படுத்தி ஈரோட்டில் வளர்ச்சி பணிகளை செய்யப்போறோம். நாம சேர்ந்து பண்ண லாம்னு என்கிட்ட சொன்னாங்க. நானும் பண்ணலாம். ஃபோன்ல பேசிக்கலாம்னு சொன்னேன். நேர்லயே வர்றோம்னு சொல்லி பலகோடிகள் டர்ன் ஓவர் பண்ற அத்தனை பேரும் வீட்டுக்கு வந்தபோதுதான் அதோட சீரியஸ்னஸ் புரிஞ்சது.

எனக்கு ஈரோடு புதுசு கிடையாது. 40 வருஷமா ஈரோட்டை பாத்துகிட்டு இருக்கிறேன். மத்த ஊர்களைக் காட்டிலும் எல்லா விஷயத்திலும் ஈரோடு முன்னுதாரணமான ஊருதான். இந்த 'ஒளிரும் ஈரோடு', அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோக போகுது. நம்முடைய மண்ணாகட்டும், தொழிலாகட்டும், உறவாகட் டும் எல்லாவற்றிலும் அதீத அன்பு அதீத காதல் அதீத பிரியம் இருக்கணும். அப்பதான் நாம செய்யுற எந்த விஷயமும் சக்ஸசா அமையும். காலிங்கராயன் ஓடை, பெரியபள்ளம் ஓடை என்ற இரண்டு ஓடைகள் சேர்ந்த ஈரோடைதான் ஈரோடு என்ற பெயர் வந்துச்சி.

1927ல் காந்தியடிகள் உயிரோடு இருக்கும்போதே சிலைவைத்து மரியாதை செலுத்திய ஊர் இந்த ஊர். தந்தை பெரியார் பிறந்த ஊர் , புரட்சியும் அமைதியும் கலந்த ஊர்தான் ஈரோடு. 900 ஆண்டுகளுக்கு முன்னா டியே கட்டாயக்கல்வி வேணும்னு சொல்லி அதை நடத்திக்காட்டியது ஈரோடுதான் அதனால்தான் இங்கு ஸ்கூல்ஸ், காலேஜஸ் அதிகமா இருக்கு.

புத்தகவிழாவை எடுத்துகிட்டா சென்னைக்கு அடுத்தபடியா ஈரோடுதான். ஊருக்கு நல்ல விஷயம் பண்றதுனா நீங்கதான் முன்னாடி வந்து நிப்பீங்க. இந்த மாதிரி ஒரு அழகான, தெளிவான எதிர்காலத்தை நோக்கி இனிமேல் ஒன்றுசேர்ந்து பண்ணுவாங்களானு தெரியாது.

இப்போ ஒண்ணு சேர்ந்தாச்சி. இனிமேல் ஈரோடு ஒளிரணும். இதை முன்னுதாரணமாக வைத்து மற்ற மாவட்டங்களிலும் 'ஒளிரும் திருப்பூர், ஒளிரும் கோவை, ஒளிரும் தர்மபுரி'ன்னு எல்லா மாவட்டங்களிலும் இதுபோன்ற அமைப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னாடி கூட இந்த பக்கம் தலக்கட்டு வரினு ஒண்ணு நடைமுறையில இருந் துச்சி. ஒவ்வொருத்தரும் சம்பாதிக்கிறதுல இருந்து 5 சதவீதம் 10 சதவீதம்னு கொடுத்து ஏரி குளங்களை சுத்தப்படுத்துறது போன்ற ஊரோட வளர்ச்சி பணிகளுக்காக கொடுப்பாங்க. இப்போ நம்முடைய வாழ்க்கை, நம்முடைய குடும்பம்னு வேகமா போய்கிட்டு இருக்கோம் அது அப்படியே ரியல் எஸ்டேட்டா மாறி அந்த இடமே காணாமல் போகிற சூழல் உருவாகிடுச்சி.

அதே போல சின்ன சின்ன மீனவக் கிராமத்தில் கூட இதுமாதிரி இருந்திருக்கு. பால் இறானு சொல்லுவாங்க அந்த மீனை வித்தா நல்ல காசு கிடைக்கும். ஆனால் விற்க மாட்டாங்க. அதை எடுத்துட்டுவந்து தன் னோட மனைவிக்கிட்ட கொடுத்து ஊருக்குள்ள புதுசா குழந்தை பெற்றவங்களுக்கு கொடுக்க சொல்லுவாங் களாம். ஏன்னா அது அவுங்க உடலுக்கு அவ்வளவு நல்லது. அப்படி காசை பார்க்காம மனிதாபிமானத்தோட வாழ்ந்துருக்காங்க. விருதுநகர்ல ஒரு சாதாரண மாலைக்கடைக்காரர்.

அவர் கடையை ராத்திரி மூடின பிறகு தினமும் நாலு மாலையை தொங்கவிட்டுட்டு போவாராம். அவர் வாழ்க்கையில ஒரு சம்பவம் நடத்திருக்கு ஒரு நாள் விருதுநகர்ல இரவு நேரத்துல ஒருத்தர் இறந்துட்டார். அப்போ விருதுநகர்ல இவரோட ஒரே ஒரு மாலை கடைதான் இருந்திருக்கு அவரும் மூடிட்டதால். இறந்தவருக்கு மரியாதை செலுத்த உடனடியா மாலை கிடைக்கல. மதுரை போய் வாங்கிட்டு வந்திருக்காங்க. அதை கேள்விப்பட்டதிலேர்ந்து நம்மள நம்பிதானே இந்த மக்கள் இருக்காங்கணு அப்போதிலிருந்து நாலு மாலைய தொங்கவிட்டுட்டு போறாராம்.

காலையில அந்த மாலை இல்லைனா ரொம்ப சந்தோஷப்படு வாராம். இப்படியான பொதுநலம் ரொம்பவும் முக்கியம். இப்படியான சுயநலம் இல்லாத அறம் இருந் தால்தான் முழு மனதிருப்தியும் சந்தோஷமும் கிடைக்கும்” என்ற சூர்யா, "எல்லோரும் சேர்ந்து ஈரோட்டை ஒளிரவச்சிடலாமா..? என்று சத்தமாக கேட்க கூட்டத்தில் இருந்து இதை ஆமோதிப்பதுபோல குரல்கள் ஓங்கி ஒலித்தன. இறுதியாக நடிகர் சூர்யா ஒளிரும் ஈரோடு அமைப்பிற்காக 10லட்சம் நன்கொடை அளித்தார்.

- எம்.புண்ணியமூர்த்தி-

படங்கள்: பா.காளிமுத்து

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close