Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நயன்தாராவுக்காகக் காத்திருக்கும் படக்குழு.

 ஜீவா இப்போது திருநாள் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ராம்நாத் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பலநாட்களாக கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுவருகிறது.

ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். 'ஈ படத்துக்குப் பிறகு இந்தப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் நயன்தாரா. படப்பிடிப்பு தொடங்கிப் பல நாட்கள் ஆகிவிட்டாலும் ஜூன் மாதத் தொடக்கத்தில் இந்தப்படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொள்வதாகச் சொல்லப்பட்டது. ஆனால் சொன்ன தேதியில் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லையாம்.

அதற்காகப் படப்பிடிப்பை நிறுத்தவேண்டாம் என்று முடிவுசெய்த படக்குழுவினர், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களைக் கூப்பிட்டு அவர்களை நடிக்கவைத்துப் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்களாம். மற்ற நடிகர்கள் இந்தப்படத்துக்காகக் கொடுத்த தேதிகள் வேறாக இருந்தபோதும் திடீரென கூப்பிடும்போதும் மறுக்காமல் வந்துவிடுகிறார்களாம்.

படக்குழுவினரும், சம்பந்தப்பட்டவர்களைக் கட்டாயப்படுத்தாமல் அவர்கள் வசதிக்கு வரச்சொல்லிப் படப்பிடிப்பை நடத்துகிறார்களாம். இயக்குநர் ராம்நாத், மொத்தத் திரைக்கதையோடு தயாராக இருந்ததால் இப்படி நடக்கிறது என்று சொல்கிறார்கள்.

தேதி கொடுத்துவிட்டு நயன்தாரா வராமல் போனது எதனால்? என்றால், வரமுடியாததற்கான காரணத்தைச் சொன்னதோடு விரைவில் வந்துவிடுவதாகவும் சொல்லியிருப்பதால்தான் படப்பிடிப்பை இரத்துச்செய்யாமல் தொடர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.  

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்