Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த வருடம் மூன்று படங்கள்..... இயக்குநர் பாண்டிராஜ் திட்டம் !

இந்த வருடம் கண்டிப்பாக மூன்று படங்கள் கொடுத்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் பாண்டிராஜ். 

பல நாட்களாக இவர் இயக்கத்தில் உருவாகி வரும் படமான 'இது நம்ம ஆளு’ ஓரளவு பிரச்னைகள் தீர்ந்து விரைவில் மீதமுள்ள காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. அதே சமயம் இவரது  இயக்கத்தில் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி நடிப்பில் உருவான ‘ஹைக்கூ’ படத்தின் படப்பிடிப்புகளும் முடிந்து படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் துவக்கவிழா நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இப்படத்திற்கு இசை ஆதி, மற்றும் சூரி காமெடியனாகவும் நடிக்கும் இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாம். 

இந்த வருடம் மூன்று படங்கள் வெளியாகும் என நம்புவதாக பாண்டிராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் டாப்பில் இருக்கும் நடிகர்களே இரண்டு படம் கொடுப்பது என்பது சற்றே முடியாத விஷயம்.

இந்நிலையில் ஒரு இயக்குநர் மூன்று படங்கள் என்பது வேகு நாட்களுக்கு பிறகு இப்போது நடக்கிறது என்றே கூறலாம். 70, 80களில் குறிப்பிட்ட சில இயக்குநர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பதால் இது சாத்தியமாக இருந்தது. இப்போது இருக்கும் தருணங்களில் வருடத்திற்கு 10 இயக்குநர்களேனும் அறிமுகமாகி விடுகிறார்கள். எனவே இந்த ஒரு வருடத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் கொஞ்சம் சிரமம் என்கிற வகையில் பாண்டிராஜ் தனக்கான பாதையை சரியாக தேர்வு செய்து போய்க்கொண்டிருக்கிறார் என்றே கூறலாம். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close