Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லிவ்விங் டு கெதர் தப்பே இல்லை - சொல்கிறார் நித்யா மேனன்!

 மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் , நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான படம் ‘ஓ காதல் கண்மணி’. இந்த படத்தில் மணிரத்னம் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை குறித்து கதையாக எடுத்திருப்பார். 

படம் வெளியான போது பல தரப்பட்ட கருத்துகள் எழுந்தன , சில சர்ச்சைகளும் உண்டாகின. எனினும் மணிரத்னம் நம்மூருக்கு இது சாத்தியம் இல்லை என்பதையும் படம் முடியும் தருவாயில் நித்யா மேனன், துல்கர் திருமணத்தின் மூலம் கூறியிருப்பார். தற்போது இந்த லிவ்விங் டு கெதர் என்பது சரி, தவறு என இரு வேறு கருத்துகள் இணையத்தில் பரவிவருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நித்யா மேனன் தனது கருத்தை பதிய வைத்துள்ளார், கல்யாணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வதில் தவறேதும் இல்லை. இதற்கான முடிவு எடுக்கும் உரிமையை இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் வாழ்வதால் பிரச்னைகள் உருவாகி பிரியக் கூட நேரலாம். 

எனினும் இந்த உறவில் குழந்தை பிறந்தால் பிரச்னைகள் வரும் என்பதையும் கூறியுள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close