Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹீரோவை அழவைத்த கதை - இயக்குநர் ராஜமௌலி சொன்ன ரகசியம்.

   பாகுபலி படத்தின் டிரெயிலர்வெளியீட்டுக்காகச் சென்னை வந்திருந்தது அந்தப்படக்குழு. இயக்குநர் ராஜமௌலி, நாயகன் பிரபாஸ், எதிர்நாயகன் ராணா, நாயகிகள் அனுஷ்கா, தமன்னா இவர்களோடு சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோர் அந்தவிழாவில் பங்கு கொண்டனர்.

அதில் இயக்குநர் ராஜமௌலி பேசத்தொடங்கும்போது, இந்தக்கதையைப் படமாக்க வேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றிது? எப்போது தோன்றியது? என்றி கேட்கப்பட்டது. அதற்கு, நான் அந்த உலகத்துக்குள்தான் (மன்னர்காலம்) வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

நான் ஒன்றாம்வகுப்புப் படிக்கும்போதே அம்புலிமாமா கதையைப் படிக்கத் தொடங்கினேன். அப்போதே அந்த உலகம் என்னை ஈர்த்துவிட்டது. நான் இயக்குநரானதும் முதல்படமாகவே இப்படி வரலாற்றுப்படத்தைச் செய்ய ஆசைதான். முதல்படத்தில் இப்படி ஒரு கதையைச் சொன்னால் தயாரிப்பாளர்கள் விரட்டிவிட்டுவிடுவார்கள் என்பதால் காத்திருந்து இப்போது படத்தை எடுத்திருக்கிறேன் என்றார்.

இந்தக்கதையை நான் முதலில் பிரபாஸிடம் இந்தக்கதையைச் சொன்னபோது, அவர் சில கண்ணீர்விட்டார், பல இடங்களில் அவருடைய முடிகள் சிலிர்த்தன, ஒரு படைப்பாளிக்கு இதுவே பெரிய பெருமை. அதனால் உடனே படத்தைத் தொடங்கினோம். ஒருகதையில் வில்லன் மிகவும் பலமானவனாக இருந்தால்தான், நாயகன் அவனை வெற்றிகொள்ளும்போது சிறப்பாக இருக்கும்.

அப்படி ஒரு சக்திமிக்க வில்லன் வேடத்துக்கு ராணாவைத் தவிர எனக்கு வேறு யாரும் தோன்றவில்லை, அவரோ ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார் அவரை எப்படி வில்லனாக நடிக்கக்கேட்பது? என்ற தயக்கம் இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லாததால் அவரைக் கேட்டேன். அவரோ, என்னிடமே இந்தக்காலகட்டத்தில் நான் வில்லனாக நடித்தால் சரியாக இருக்குமா? நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, அவரைச் சமாதானப்படுத்தி நடிக்கச் சொல்லிக்கட்டாயப்படுத்தவும் விரும்பவில்லை எனவே முடிவை அவரிமே விட்டுவிட்டேன். சில மணிநேரங்களிலேயே இந்தப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். 

    அடுத்து அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் சார் நாசர் சார் ஆகியோரும் எனனக்குப் பொருத்தமாக அமைந்தார்கள். படம் எடுத்ததை இப்போது நினைத்துப்பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆனால் எடுத்து முடித்துவிட்டோம். படம் திருப்தியாக வந்திருக்கிறது என்று சொன்னார்.
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்