Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பரதேசிக்கு அப்புறம் ஒரே இரத்தக்களறிதான், அதர்வாவின் கதை அனுபவங்கள்.

 இயக்குநர் பாலாவின் தயாரிப்பில் இயக்குநர் சற்குணம் இயக்கியிருக்கும் சண்டிவீரன் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் பாலா, கோபுரம்பிலிம்ஸ் அன்புச்செழியன், படத்தின் நாயகன் அதர்வா, நாயகி ஆனந்தி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் அதர்வா பேசும்போது, பரதேசி படத்தை முடித்ததும் மறுபடியும் என்னுடைய தயாரிப்பில் ஒருபடத்தில் நடி என்று பாலாசார் சொன்னார். அதற்காக இருவருமே பல கதைகள் கேட்டோம், எதுவுமே செட்டாகவில்லை, பரதேசிக்குப் பிறகான படம் என்பதால் எனக்குச் சொல்லப்பட்ட கதைகள் எல்லாமே ரத்தக்களறியாகவே இருந்தன, எடுத்தவுடனே கும்மிருட்டு அதிலிருந்து திடீரென ஒருவனை அடித்துத்தூக்கி வெளியே போடுகிறார்கள் என்று தொடங்குவார்கள், ஹீரோ யாரை அடிக்கிறார் என்று கேட்டால், இல்லை ஹீரோவைத்தான் அடிக்கிறார்கள் என்பார்கள் என்னடா இது என்று யோசிப்பதற்குள் இது பாலாசார் டைப் கதை என்று சொல்லி வாயை அடைத்துவிடுவார்கள்.

எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு நல்லகதைக்காகக் காத்திருந்த நேரத்தில், ஒருநாள் திடீரென என்னைக் கூப்பிட்ட பாலாசார், நான் ஒரு கதை கேட்டிருக்கிறேன், அந்தக்கதையில் நீ நடி, என்னை நம்பி நடி உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார்.

அவர் சொன்னதால் கதையைக் கேட்காமலே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன், பின்பு கதையைக் கேட்டதும் எனக்கும் மிகவும் பிடித்துவிட்டது. கிராமத்துக்கதையொன்றில் நடிக்க நீண்டநாட்களாகவே நினைத்துக்கொண்டிருந்தேன் இந்தப்படம் சரியாக அமைந்தது. இந்தப்படத்தின் இயக்குநர் சற்குணத்தோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. படம் மிகவும் திருப்தியாக வந்திருக்கிறது எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொன்னார்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close