Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாயகியை நம்பவைத்து ஏமாற்றிய இயக்குநர் சற்குணம்.

  அதர்வா, கயல்ஆனந்தி ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் சண்டிவீரன் படப்பிடிப்பு நடந்தபோது ஒரு குழந்தையை ஏமாற்றுவது போல நாயகி ஆனந்தியை மொத்தப்படக்குழுவும் சேர்ந்து ஏமாற்றியதாம். தஞ்சைப்பகுதியைக் கதைக்களமாகக் கொண்ட கிராமத்துப்படம் அது. அந்தப்படத்தின் படப்பிடிப்பும் தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாராப் பகுதிகளிலேயே நடைபெற்றிருக்கிறது.

படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது நாயகி ஆனந்தி இயக்குநர் சற்குணத்திடம் வந்து, என்னைவைத்து தனியாகப் பாடல் எடுப்பீர்கள் என்று நினைத்தேன் நன்றாக நடனம் ஆடக்கூடிய மாதிரி துள்ளல்பாடல் கொடுப்பீர்கள் என்று நினைத்தேன். இவை எதுவுமே நடக்கவில்லை என்று வருத்தப்பட்டுச் சொன்னாராம். அதனால், அவரை மகிழ்வித்து உற்சாகமாக நடிக்கவைக்கவேண்டுமென்பதற்காக, இந்தப்படத்துக்காக இரண்டுபாடல்கள் நியூசிலாந்தில் எடுக்கவிருக்கிறோம் அப்போது உன் ஆசையெல்லாம் நிறைவேறிவிடும் என்று சொன்னார்களாம்.

அவரும் அதை நம்பி மிகவும் சந்தோசமாகிவிட்டராம். அதோடு அவருடைய வீட்டிலும் நியூசிலாந்து போகப்போகிறோம் என்று சொல்லிவிட்டாராம். அவர்களும் எப்போது போகிறோம் என்று கேட்டுக்கொண்டேயிருந்தார்களாம். இதோ அதோவென்று சொல்லியே மொத்தப்படத்தையும் முடித்துவிட்டார்களாம்.

இந்தப்படத்தின் கதை, அதன் தன்மை பற்றி எதுவும் தெரியாமல் நாங்கள் சொன்னதை அப்படியே நம்பிக்கொள்ளும் அளவுக்குக் குழந்தை மனசு உள்ளவர் ஆனந்தி என்று நாயகன் அதர்வா புகழ்ந்தார். ஆனந்தியிடம் இதுபற்றிக் கேட்டபோது, உண்மைதான் நியூசிலாந்து போகப்போகிறோம் என்று ஷூட்டிங் முடிகிறவரை சொல்லிவிட்டுக் கடைசியில் ஏமாற்றிவிட்டார்கள் என்று வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னார்.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close