Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘ஒழுங்கா வண்டி ஓட்டுய்யா!’ - நடுரோட்டில் டென்ஷன் ஆன நஸ்ரியா!

ஹத் ஃபாசிலைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, லைம்லைட்டில் கொஞ்சம் டிம்மாக இருந்தார் நடிகை நஸ்ரியா. ஆனால், சோஷியல் மீடியாக்களில் வைரலாகப் பரவி வருவதில் எல்லா நடிகைகளைப் போல் நஸ்ரியாவும் பிஸி.

நீங்கள் நினைப்பதுபோல், இது அந்த வைரல் கிடையாது. நஸ்ரியாவுக்குள் தூங்கிக் கொண்டிருந்த சினம்கொண்ட சிறுத்தை நடுரோட்டில் தட்டி எழுப்பப்பட்ட விஷயம் இது. ஃபஹத்துக்கும். நஸ்ரியாவுக்கும் ரொம்பப் பிடித்த விஷயம் கார் ஓட்டுவது. இதற்காகவே நஸ்ரியாவுக்கு, திருமணத்துக்குப் பிறகு 70 லட்ச ரூபாய் மதிப்பில் ரேஞ்ச்ரோவர் இவோக் கார் பரிசளித்தார் ஃபஹத். இருவருக்குமே டிரைவர் வைத்து கார் ஓட்டுவது பிடிக்காதாம்.

எங்கு சென்றாலும், இருவரும் காரைத் தனியே எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்களாம். அப்படித்தான் ஒரு பெர்சனல் வேலையாக தனியாகக் கிளம்பிச் சென்ற நஸ்ரியாவின் ரேஞ்ச்ரோவர் காரில், மூவட்டுப்புழா சாலையில் ஒரு பைக் டிரைவர் கோடு போட, காரின் பெயின்ட் உரிந்ததைக் கண்டு செம டென்ஷன் ஆகிவிட்டாராம் நஸ்ரியா.

டிரைவர் சீட்டில் இருந்து இறங்கி, ‘‘ஒழுங்கா வண்டி ஓட்டத் தெரியாதா? இதோட சர்வீஸ் ரேட் எவ்வளவு தெரியுமா?’’ என்று பைக் ஓட்டியவரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம். நடிகை தெருவில் இறங்கி சண்டை போடுவதைக் கண்டு ஏரியாவில் கூட்டம் கூடிவிட, டிராஃபிக் போலீஸ் வந்து கூட்டத்தைக் கலைத்து, நஸ்ரியாவைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்களாம்.

(பின்குறிப்பு: ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தில் ஒரு முறை ஸ்கூட்டர் ஓட்டும் சீனில், நஸ்ரியா கன்ட்ரோல் இழந்து எதிரே உள்ள இனோவாவில் இடித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றது எல்லாம் தனிக் கதை!)

- தமிழ் -

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close